Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.55 லட்சம் கிடைக்கும்… எங்கே? யாருக்கெல்லாம் உதவி?

குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.55 லட்சம் கிடைக்கும்… எங்கே? யாருக்கெல்லாம் உதவி?

Balasubramanian KBy Balasubramanian KAugust 27, 20261 Min Read21 ViewsUpdated:August 27, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்துள்ளதை அடுத்து, அதை அதிகரிக்கும் நோக்கில், குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு ரூ.55 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

உலகளவில் பல நாடுகளில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பான தொடர் நடவடிக்கைகளால், அதன் விகிதம் சரிந்துள்ளது. ஒரு காலத்தில் குடும்பத்துக்கு 4,5 குழந்தைகள் இருந்த நிலை மாறி, இன்று வீட்டுக்கு ஒன்றிரண்டு குழந்தைகள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை சதவீதம் போதுமான அளவில் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையான மக்கள் தொகை சரிவை சந்தித்து வருகின்றன. அந்த வகையில், சிங்கப்பூரும் மிக கடுமையான பிறப்பு விகித சரிவை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் தொகையை அதிகரிக்க அந்த நாட்டு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 17 வயது வரை பல்வேறு கட்டணங்களாக 70,000 சிங்கப்பூர் டாலர் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு, இந்திய ரூபாயில் சுமார் 55 லட்சம் ஆகும்.

குறைந்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை, அந்த நாட்டு பிரதமர் லாரன்ஸ் வாங்க் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில், குழந்தை பிறந்த உடன் கை செலவுக்காக ரூ.7 லட்சம் வழங்கப்படும். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பெற்றோரின் வங்கி கணக்கில் ரூ.1.25 லட்சம் வரவு வைக்கப்படும்.

இதுதவிர, குழந்தை பராமரிப்பு செலவு குறைப்பு, பெற்றோர்களுக்கு கூடுதல் விடுமுறை, வீடு வாங்குவதற்கான சலுகைகள் உள்ளிட்டவையும் இந்த திட்டத்தில் இடம்பெறும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

Author

  • Balasubramanian K
    Balasubramanian K
#Baby #BreakingNews #Singapore #tamil #TamilNadu #TamilNaduNews #TamilNews #Tngovt #TVK #சிங்கப்பூர் #பிறப்புவிகிதம்
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleநேபாளத்தை புரட்டிப் போட்ட பேரிடர்… தமிழர்களின் கதி என்ன?பெருவெள்ளத்துக்கு என்ன காரணம்?
Next Article தவெகவுக்கு 60 எம்பிக்கள்… விஜய் பிரதமராக சான்ஸ்! ஆஸ்தான ஜோதிடர் அதிரடி!!
Balasubramanian K
  • Website

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.