மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்கள் மற்றும் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, சென்னை சென்ட்ரல் – மதுரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 16-ஆம் தேதி மாலை 4.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 4.30 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, செப்டம்பர் 18-ஆம் தேதி அதிகாலை சென்னை வந்தடையும்.
மேலும், தாம்பரம் – மதுரை அதிவிரைவு சிறப்பு ரயில் செப்டம்பர் 16-ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.
அதேபோல், சென்னை கடற்கரை – மானாமதுரை MEMU சிறப்பு ரயில் செப்டம்பர் 16-ஆம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும். இந்த ரயிலில் 12 முன்பதிவில்லா MEMU பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கு செல்லும் பக்தர்கள் இந்த ரயில் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

