Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, October 25
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தினக்கதிர்By தினக்கதிர்October 13, 20262 Mins Read65 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சபாநாயகரின் உத்தரவு செல்லுமா? தகுதிநீக்க வழக்குகளின் நிலை என்ன? அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு

அதிமுகவைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாக்களை ஏற்ற சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொறடா உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படும் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகிய ஆறு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராகத் தகுதிநீக்க நடவடிக்கை தொடர்பான விவகாரம் நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில், ஆறு பேரின் ராஜினாமாக்களை ஏற்ற சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ராஜினாமாக்களை ஏற்கும் முன்பு, சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் சுயவிருப்பத்துடன் பதவி விலகினார்களா என்பதை உறுதிப்படுத்த உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்பது மனுதாரர்களின் வாதமாகும்.

ஆனால், சட்டப்படி ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், சுயவிருப்பத்துடன் பதவி விலக விரும்பும் உறுப்பினர்களைத் தொடர்ந்து பதவியில் இருக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ராஜினாமா தொடர்பான விசாரணையும் தகுதிநீக்க நடவடிக்கையும் தனித்தனியான விவகாரங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரித்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகும் தீர்ப்பு குறித்து அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சபாநாயகரின் உத்தரவு சட்டப்படி செல்லுமா என்பது குறித்த நீதிமன்றத்தின் முடிவு, ராஜினாமா மற்றும் தகுதிநீக்க நடவடிக்கைகள் தொடர்பான சட்ட விவாதங்களில் முக்கியத்துவம் பெறும்.

அதேவேளையில், இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து அதிமுகவில் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. சபாநாயகரின் உத்தரவு உறுதி செய்யப்பட்டால், மேலும் சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணையக்கூடும் என்ற கருத்துகளும் அரசியல் வட்டாரத்தில் முன்வைக்கப்படுகின்றன.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#ADMK #MadrasHighCourt #Speaker #TamilNews #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆணையர், ரிசீவர் பணிகள்: நவ. 5 கடைசி நாள்!
Next Article திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026
Dinakkadir

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026
Dinakkadir

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆணையர், ரிசீவர் பணிகள்: நவ. 5 கடைசி நாள்!

October 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,123 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20262,107 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,367 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.