சென்னை உயர்நீதிமன்றத்தின் மூல வழக்கு விசாரணைப் பிரிவில் (Original Side), 2026–2028 காலத்துக்கான வழக்கறிஞர் ஆணையர் (Advocate Commissioner), வழக்கறிஞர் ரிசீவர் (Advocate Receiver) பணிகளுக்கான பட்டியல் தயாரிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான அறிவிப்பை உயர்நீதிமன்றப் பதிவாளர் (நீதித்துறை) ஏ. ரமேஷ், ROC No.9210/2026/OS என்ற எண்ணில், அக். 7-ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.
பிணையத் தொகை:விண்ணப்பதாரர்கள் ரூ.10,000-ஐ தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக (Fixed Deposit) செலுத்த வேண்டும். பிணையத் தொகை தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் Original Side Rules, 1956, Order XXXIV, Rule 3-இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 5-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சென்னை உயர்நீதிமன்றத் தபால் பிரிவில் (Tapal Section) சமர்ப்பிக்க வேண்டும்.
காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்களும், முழுமையற்ற விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள நிபந்தனைகளைச் சரிபார்த்து உரிய காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

