பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள பகுதிகளில் ஒன்றான மதுரமங்கலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்துக்கான நில எடுப்பு பகுதிக்கும், மதுரமங்கலத்தில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பேட்டை பகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்தி பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு நிர்வாக அனுமதி அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2026–27 வரவு-செலவு கூட்டத் தொடரில், மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அறிவித்திருந்தார்.
தற்போது வெளியிடப்பட்ட அரசிதழ், ஏற்கெனவே நடைபெற்று வரும் நில எடுப்பு பணிகளின் ஒரு பகுதியாகும் என்றும், பரந்தூர் விமான நிலைய திட்டத்துடன் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

