தமிழ்நாட்டில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தாக்கல் செய்யும் சில முக்கிய பத்திரங்களை இனி நேரில் வராமல் ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் வகையில் ‘Presenceless Registration’ நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் 15.09.2026 முதல் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தாக்கல் செய்யும்:
* Deposit of Title Deeds (MODT)
* Deed of Receipt
ஆகிய பத்திரங்கள், சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வங்கி அதிகாரிகள் நேரில் செல்லாமல், ஆன்லைன் வழியாக பதிவு செய்யப்பட உள்ளன.
STAR 3.0 – Anywhere Registration திட்டத்தின் Phase-II கீழ் இந்த புதிய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம்:
* பதிவு பணிகளில் ஏற்படும் காலதாமதம் குறையும்,
* நேரடி மனிதத் தொடர்பு குறையும்,
* பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கும்
என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

