Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, October 26
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

தினக்கதிர்By தினக்கதிர்October 25, 20262 Mins Read41 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சுற்றுச்சுவர் இடிந்தால், மொட்டை மாடியில் தண்ணீர் தேங்கினால் தலைமை ஆசிரியரே பொறுப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் ஆய்வு மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மழைக்காலத்தில் பள்ளி கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்

மேற்கூரை மற்றும் மொட்டை மாடி ஆய்வு: பள்ளி கட்டிடங்களின் மேற்கூரைகள், கைப்பிடிச் சுவர்கள், ஜன்னல், கதவுகளுக்கு மேலுள்ள சன்ஷேடுகள் ஆகியவற்றில் விரிசல் அல்லது சேதம் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மழைநீர் வடிகால் குழாய்களில் அடைப்பு இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். மொட்டை மாடிகளில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுச்சுவர் பாதுகாப்பு: மழையால் ஈரப்பதம் அதிகரித்து பலவீனமடையும் சுற்றுச்சுவர்களை தினசரி கண்காணிக்க வேண்டும். சேதமடைந்த அல்லது விரிசல் ஏற்பட்ட சுற்றுச்சுவர்களின் அருகே மாணவர்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து எச்சரிக்கைப் பலகைகள் வைக்க வேண்டும்.

சேதமடைந்த வகுப்பறைகள்: சுவர்கள் மற்றும் கூரைகளில் விரிசல் அல்லது நீர்க்கசிவு காணப்படும் வகுப்பறைகளை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அவற்றை உடனடியாக மூடி, தகுதிவாய்ந்த பொறியாளரின் பாதுகாப்புச் சான்றிதழ் கிடைக்கும் வரை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கூடாது.

பழைய கட்டிடங்களை அகற்றுதல்: பள்ளி வளாகங்களில் பயன்பாடற்ற மற்றும் இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்களை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அக்கட்டிடங்களைச் சுற்றி மாணவர்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும்.

கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள்: ஆழமான குழிகள், வாய்க்கால்கள் மற்றும் பள்ளங்களைச் சுற்றி உறுதியான தடுப்புகள் அமைக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களை மாணவர்கள் கூடும் இடங்களில் வைக்கக் கூடாது.

கிணறுகள் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டிகள்: பள்ளி வளாகங்களில் உள்ள திறந்தவெளிக் கிணறுகள், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகள் ஆகியவற்றை உறுதியான மூடிகளால் மூடி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் அவற்றின் தாங்குதளங்களின் உறுதித்தன்மையையும் ஆய்வு செய்ய வேண்டும்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்து வகை பள்ளிகளிலும் மேற்கண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என மூன்று இயக்குநர்கள் கூட்டாக அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல், மாணவர்களின் உயிரைப் பாதுகாக்க தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#EducationDepartment #SchoolSafety #TamilNaduSchools #TamilNews #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதிண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026
Dinakkadir

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Dinakkadir

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆணையர், ரிசீவர் பணிகள்: நவ. 5 கடைசி நாள்!

October 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,123 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20262,107 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,367 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.