வரும் 2029-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிந்தியாவில் விஜய்யின் தவெக, 60க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்; நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு விஜய்க்கு உள்ளது என்று அவரது ஆதஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் தெரிவித்துள்ளதாக, தகவல் கசிந்துள்ளது.
விஜய் முதல்வராவார் என்று முன்பே கணித்தவர், ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல். தவெக என்ற கட்சி பெயர் தொடங்கி, அதற்கு கொடி, மாநாடு உள்ளிட்ட அனைத்துக்கும் நாள் குறித்தவர் இவர். விஜய் ‘வெற்றி என்ற வார்த்தையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள இவர் ஒரு காரணம் என்று சொல்வதுண்டு.
இந்த சூழலில் தனியார் சேனல் ஒன்றுக்கு தவெக ஆதரவாளரான சிங்காரவடிவேலன் என்பவர் அளித்த பேட்டியானது, பல தரப்பிலும் பெரும் பேசுபொருளாகி இருக்கிறது. வரும் 2029 மக்களவைத் தேர்தலில் விஜய்க்கு தமிழகம் புதுவையில் 40 இடங்கள் உறுதி; கேரளா, ஆந்திரா உள்பட மொத்தம் விஜய் ஆதரவு கட்சிகள் 60க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று, ரிக்கி ரத்தன் பண்டிக் கணித்துள்ளதாக, அவர் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
தவெக என்ற கட்சியை தமிழ்நாடு என்ற ஒரு மாநிலத்துடன் சுருக்க முடியாது. வருங்காலத்தில் தென் இந்தியா முழுவதும் தவெக வளர்ந்து செழிக்கும். வரும் 2028 ஜனவரிக்கு பிறகு, விஜய் விஸ்வரூபம் எடுப்பார். கேரளா, கர்நாடகாவில் பெரிய கட்சியாக தவெக மலரும். தவெக ஆதரவு கட்சிகள், இந்த மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று தனது கணிப்பை பண்டிட் ரத்தன் பகிர்ந்துள்ளதாக, அந்த பேட்டியில் சிங்காரவேலன் குறிப்பிட்டுள்ளார்.

