Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம்..

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம்..

தினக்கதிர்By தினக்கதிர்July 13, 20262 Mins Read165 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பழையூரில், இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை மத்திய மக்கள் தொடர்பக மண்டல அலுவலகம் சார்பில், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமிற்கு சென்னை மத்திய மக்கள் தொடர்பக மண்டல அலுவலகத்தின் உதவி இயக்குநர் திரு. பாலநாகேந்திரன் தலைமை தாங்கினார்.

இம்முகாமில் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்கள் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சுய ஒழுக்கத்தால் மட்டுமே போதைப்பொருளை ஒழிக்க முடியும்: உதவி இயக்குநர் பேச்சு

முகாமிற்குத் தலைமை தாங்கிப் பேசிய உதவி இயக்குநர் திரு. பாலநாகேந்திரன், “மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதுதான் இந்திய அரசு. அரசின் மூலம் கிடைக்கும் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களாகிய உங்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் தங்களது கடமை” என்று குறிப்பிட்டார். மேலும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்துப் பேசுகையில், சுய ஒழுக்கத்தால் மட்டும்தான் போதைப்பொருளை சமூகத்தில் இருந்து முழுமையாக ஒழிக்க முடியும் என்பதால், அனைவரும் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விவசாயிகளுக்குச் சாதகமாக மாறியுள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் திரு. பிரகாஷ், ‘வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்’ குறித்துப் பேசுகையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்:

  • 100 நாள் வேலைத் திட்டம் தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கும் பெரும் நன்மை கிடைக்கிறது.
  • விவசாயிகளின் நடவுப் பணிகளின் போது 60 நாட்கள் விடுமுறை அளிக்கும் வகையில் இத்திட்டம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

சௌசௌ, மிளகு பயிரிட அரசு மானியம்

தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் திருமதி. காயத்திரி பேசுகையில், “சிறுமலை என்பது ஒரு மலைப்பகுதியாகும். இங்குள்ள விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத் துறை மூலம் மிளகு மற்றும் சௌசௌ போன்ற செடிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சௌசௌ பயிரிடும் விவசாயிகள் கல் பந்தல் அல்லது மர பந்தல் அமைப்பதற்கு அரசு சார்பில் பத்தாயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

துறை சார்ந்த விழிப்புணர்வுகளும் இதர நிகழ்வுகளும்

  • பெண்கள் மேம்பாடு: பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் காலின் செல்வராணி விழிப்புணர்வு ஊட்டினார்.
  • ஆரோக்கியம் மற்றும் சுயவேலைவாய்ப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரதீபா, கனரா வங்கி முன்னோடி மேலாளர் தங்க துரை பாண்டியன், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய ஒருங்கிணைப்பாளர் கருப்புசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் ஆகியோர் கலந்துகொண்டு தத்தம் துறைகளின் முக்கியத் திட்டங்களை விளக்கினர்.

பொதுமக்களுக்குப் பரிசுகள்

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, விழிப்புணர்வுத் திட்டங்கள் குறித்துப் பொதுமக்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்குச் சரியாகப் பதிலளித்த பொதுமக்களுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மதுரை மத்திய மக்கள் தொடர்பகத்தின் கள விளம்பர உதவி அலுவலர் திரு. போஸ்வெல் ஆசீர் மற்றும் தர்மபுரி கள விளம்பர உதவி அலுவலர் திரு. தியாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர். இச்சிறப்பு முகாமில் சிறுமலைப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#AwarenessCamp #Dindigul #SayNoToDrugs #Sirumalai #TamilNadu #TamilNaduNews #TNNews #TVK #WomenEmpowerment #சிறுமலை TVK GOVT
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதிண்டுக்கல் பைபாஸ் வாகன ஓட்டிகளின் திக் திக் நிமிடங்கள்!”
Next Article படிக்கப் போக பஸ் வசதி கேட்டோம்… இன்னும் வரவில்லை..!குடிக்கப் போக “பார்” வசதி கேட்காமலேயே வந்துவிட்டது..!
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.