Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

அரசுத் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய தொண்டு நிறுவனங்கள் பங்காற்ற வேண்டும்: ஜெகநாத் மிஸ்ரா

September 22, 2026

அரசு நில விவகாரம்: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம்

September 22, 2026

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படப் போட்டி

September 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Tuesday, September 22
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » கூத்தாண்ட குப்பம் ஊராட்சியில் தலைவர் இல்லாமல் அவரது கணவர் தலைமையில் கிராம சபை கூட்டம்

கூத்தாண்ட குப்பம் ஊராட்சியில் தலைவர் இல்லாமல் அவரது கணவர் தலைமையில் கிராம சபை கூட்டம்

AdminBy AdminAugust 6, 20261 Min Read206 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திருப்பத்தூர் மாவட்டம், நாட்ராம்பள்ளி வட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தாண்டகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சித் தலைவர் இல்லாத நிலையில் அவரது கணவர் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

16-வது நிதிக் குழு மானியத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப் பணிகளைத் தேர்வு செய்வதற்காக, ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 11 மணியளவில் கூத்தாண்டகுப்பம் ஊராட்சியில் இந்தச் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி பங்கேற்கவில்லை என்றும், அதற்குப் பதிலாகத் தலைவரின் கணவர் சுரேஷ் தலைமையில் ஊராட்சிச் செயலாளர் அனிதா கூட்டத்தை நடத்தியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு முறையான அழைப்பு விடுத்து, மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் மேற்பார்வையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இம்முறைகள் பின்பற்றப்படாமல், ஊராட்சித் தலைவரின் கணவர் முன்னிலையில் கூட்டம் நடத்தப்பட்டதாகப் புகார்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சித் துணைத் தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அல்லது பொதுமக்கள் யாரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (100 நாள் வேலைத் திட்டம்) பணியாளர்களைக் கொண்டு மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட ஊராட்சியின் பதிவேடுகளை ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், ஊராட்சிச் செயலாளர், ஊராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

  • Admin
    Admin
#BreakingNews #Natrampalli #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #TamilNews #Tirupattur #Tngovt #TVK #VillageAdministration
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஆடிதேய்பிறை அஷ்டமி திருவிழா: சேத்திரபாலபுரம் காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
Next Article முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்
Admin
  • Website

Related Posts

Dinakkadir

அரசுத் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய தொண்டு நிறுவனங்கள் பங்காற்ற வேண்டும்: ஜெகநாத் மிஸ்ரா

September 22, 2026
Dinakkadir

அரசு நில விவகாரம்: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம்

September 22, 2026
Dinakkadir

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படப் போட்டி

September 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,109 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,985 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,347 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.