Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Thursday, November 5
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » அரசு நில விவகாரம்: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம்

அரசு நில விவகாரம்: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம்

தினக்கதிர்By தினக்கதிர்September 22, 20261 Min Read81 ViewsUpdated:September 22, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தஞ்சாவூர் திருமலைசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 31.37 ஏக்கர் அரசு நில விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் வெளியேற்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும், பல்கலைக்கழகம் முன்வைத்துள்ள மாற்று நிலம் வழங்கும் கோரிக்கையை ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருமலைசமுத்திரத்தில் உள்ள குறிப்பிட்ட நிலம், 1985-ஆம் ஆண்டு திறந்தவெளி சிறைச்சாலை திட்டத்துக்காக சிறைத்துறைக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வளாக விரிவாக்கம் செய்து கட்டடங்கள், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு நிலத்தை மீட்டு சிறைத்துறையின் பயன்பாட்டுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், அரசு நிலத்தை மீட்பது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

வழக்கு விசாரணையின்போது, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் நிறுவனம் என்பதையும், பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

அதே நேரத்தில், அரசு நிலத்தை ஆக்கிரமித்த பின்னர் மாற்று நிலம் வழங்கும் நடைமுறையை ஏற்றுக்கொண்டால், அது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாக அமையும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் முன்வைத்த மாற்று நிலம் தொடர்பான கோரிக்கையை ஆய்வு செய்ய தமிழக அரசு உயர்மட்டக் குழு அமைத்து பரிசீலிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதி முடிவு எடுக்கப்படும் வரை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#supremecourt #TamilNews #Thanjavur #Tngovt ASTRAUniversity #
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleசிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படப் போட்டி
Next Article அரசுத் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய தொண்டு நிறுவனங்கள் பங்காற்ற வேண்டும்: ஜெகநாத் மிஸ்ரா
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026
Dinakkadir

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026
Dinakkadir

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,124 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20262,107 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,368 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.