Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படப் போட்டி

September 21, 2026

சேவல் சண்டைக்கு முழு தடை இல்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு விளக்கம்

September 21, 2026

நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள் குறித்து வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

September 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, September 21
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படப் போட்டி

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படப் போட்டி

தினக்கதிர்By தினக்கதிர்September 21, 20261 Min Read1 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) சார்பில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களிடையே சமூகப் பொறுப்புணர்வை வளர்த்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் அவர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதே இப்போட்டியின் நோக்கமாகும்.

இப்போட்டிக்கான கருப்பொருள்களாக, “பெண்களின் பாதுகாப்பில் ஆண்களின் பங்கு”, “பார்வையாளரின் தலையீடு (Bystander Intervention)”, “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் சமூகத்தின் பங்கு” ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

போட்டியில் பங்கேற்கும் குறும்படங்கள் தமிழில் இருக்க வேண்டும். அதிகபட்சம் 2 நிமிடங்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும். தனிநபராகவோ அல்லது அதிகபட்சம் 5 பேர் கொண்ட குழுவாகவோ மாணவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்கள் Bonafide Certificate மற்றும் பதிவு படிவத்துடன் தங்களது படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டும்.

குறும்படங்களை https://bit.ly/SSF என்ற இணையதள இணைப்பு மூலம் சமர்ப்பிக்கலாம். படைப்புகளை அனுப்புவதற்கான கடைசி தேதி 10.10.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000, மூன்றாம் பரிசாக ரூ.15,000 வழங்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#ChildSafety #CollegeStudents #ShortFilmContest #TamilNaduPolice #TamilNews #Tngovt #WomenSafety
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleசேவல் சண்டைக்கு முழு தடை இல்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு விளக்கம்
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

சேவல் சண்டைக்கு முழு தடை இல்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு விளக்கம்

September 21, 2026
Dinakkadir

நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள் குறித்து வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

September 21, 2026
Dinakkadir

வெற்றிப் பயணம் திட்டம்: முதல்வர் தலைமையில் முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்

September 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,104 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,983 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,347 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.