மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (02.09.2026) அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிசாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தொழில் மாநாடு & கண்காட்சி 2026 குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு பதாகையை வெளியிட்டார்.
வரும் 25.09.2026 அன்று மதுரை ஹோட்டல் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இம்மாநாடு மற்றும் கண்காட்சி, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) மற்றும் மதுரை திருநங்கைகள் திருநம்பிகள் ஆவண மையம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
தமிழகம் முழுவதும் சிறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் இதில் பங்கேற்று, தங்களது தயாரிப்புகள், தொழில் முயற்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர்.
திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் இந்நிகழ்வு, அவர்களுக்கு சந்தை வாய்ப்புகள் மற்றும் தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

