சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) உறுப்பினராக மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினர் பி. ரேவந்த் சரண் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-ன் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை (அரசாணை எண்: 162) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும நிர்வாக அலுவலர் மு. இந்துமதி, ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம் (கடித எண்: E5/3843/2026 – 2U), உறுப்பினர் நியமனம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகரப் பகுதியின் திட்டமிடல், வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் முக்கிய அமைப்பான CMDA-வில், சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

