தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த டீன் (முதல்வர்) பணியிடங்களை நிரப்பும் வகையில், 14 மருத்துவ அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், 2026-27ஆம் ஆண்டுக்கான அரசு மருத்துவக் கல்லூரி டீன் பதவிக்கான பரிந்துரைக் குழுவின் அடிப்படையில், மருத்துவ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ஆர். செல்வராஜன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி டீனாகவும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் எஸ். கலைவாணி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை டீன் டாக்டர் ஆர். மணி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி டீனாகவும்; வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் எம். ரோகிணி தேவி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீனாகவும்; தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் எஸ். முத்து சித்ரா, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி டீனாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் டி. ஜெயசிங், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை டீனாகவும், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ஆர். அமுதா ராணி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் எம். காயத்ரி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் வி.பி. மோகன் காந்தி, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வில் புதிய டீன்கள்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் வி.வி. கண்ணன், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை டீனாகவும்; சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜி.
செல்வம்பிகை, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி கேஏபி விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் டபிள்யூ. எட்வினா வசந்தா, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி டீனாகவும், சென்னை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜி. பாலாஜி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி டீனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ். செந்தில்குமார், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பொறுப்புகளில் மருத்துவர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது


