திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இன்று திண்டுக்கல் நகரின் செல்லாண்டி அம்மன் கோவில் தெரு, நாராயண பிள்ளை தோட்டம், பழனி ரோடு, கோவிந்தாபுரம், மருதாணிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நடை ரோந்து (Foot Patrol) பணியில் ஈடுபட்டார்.

அப்போது அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் கலந்துரையாடிய அவர், குழந்தைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நடை ரோந்து பணியின் போது திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கார்த்திக், நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

