Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » பேரழிவை உருவாக்கியது இயற்கையா? பேராசையா? — நேபாளமும் கேரளாவும் சொல்லும் பாடம்!

பேரழிவை உருவாக்கியது இயற்கையா? பேராசையா? — நேபாளமும் கேரளாவும் சொல்லும் பாடம்!

தினக்கதிர்By தினக்கதிர்August 28, 20262 Mins Read210 ViewsUpdated:August 29, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வளர்ச்சி… வருமானம்… வசதி வாய்ப்புகள்…
கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கும் சொற்கள். ஆனால், இந்த கவர்ச்சிகரமான சொல்லாடல்களின் பின்னால் இயற்கையை சுரண்டும் பேராசை மறைந்திருந்தால், அதன் விளைவு மனிதர்களையே திரும்பத் தாக்கும் என்பதற்கு நேபாளமும் கேரளாவும் எச்சரிக்கை மணியாக மாறியுள்ளன.

இமயமலையை அணிகலனாகக் கொண்ட நேபாளத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம், இயற்கையின் சக்தியை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது. மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட சாலைகள், சுரங்கப்பாதைகள், ஆறுகளின் இயற்கையான போக்கை மாற்றிய நீர்மின் திட்டங்கள், ஆற்றுப்படுகைகள் மற்றும் வெள்ளச் சமவெளிகளில் விதிகளை மீறி எழுப்பப்பட்ட கட்டிடங்கள் என மனிதனின் தலையீடுகள், இயற்கை சீற்றத்தின் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒருகாலத்தில் இயற்கையின் ஓட்டத்தில் பயணித்த ஆறுகள், இன்று மனிதனின் திட்டங்களுக்கேற்ப கட்டுப்படுத்தப்படுகின்றன. மலையைக் குடைந்து சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்படுகின்றன. சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக மலைப்பகுதிகளில் கட்டுமானங்கள் பெருகுகின்றன.

இயற்கையை வெல்லலாம் என்று நினைத்த மனிதனின் தந்திரம், இயற்கை சீற்றத்தின் முன் தவிடுபொடியாகிறது.

நேபாளத்தில் சாலைகளில் ஓடிய கனரக வாகனங்கள், கட்டுமானங்கள் என மனிதனின் வளர்ச்சியின் அடையாளங்களாகத் தெரிந்தவை, வெள்ளத்தின் வேகத்திற்கு முன்னால் ஒன்றுமில்லாமல் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் அதற்கு சாட்சியாகின்றன.

இதுபோன்ற எச்சரிக்கையை கேரளாவும் ஏற்கனவே வழங்கியுள்ளது.
கனமழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை நிகழ்வுகளுடன், மலைப்பகுதிகளில் கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், காடழிப்பு, ஆற்றுப்பாதைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட மனித தலையீடுகள் இணைந்தபோது பேரழிவின் தாக்கம் பல மடங்கு அதிகரித்ததை கேரளாவின் கடந்தகால வெள்ளப் பேரழிவுகள் உணர்த்தின.

இயற்கை வளங்களை பயன்படுத்துவதற்கும், இயற்கையை அழிப்பதற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

வளர்ச்சி வேண்டும்… ஆனால் இயற்கையை அழித்துக் கொண்டான வளர்ச்சி வேண்டுமா?

இன்று ஒரு மலை வெட்டப்படுகிறது…
நாளை ஒரு ஆறு தடுக்கப்படுகிறது…
மறுநாள் ஒரு காட்டுப்பகுதி அழிக்கப்படுகிறது…
அதற்குப் பிறகு வெள்ளம் வருகிறது…
நிலச்சரிவு ஏற்படுகிறது…
அப்போது இயற்கையை குற்றவாளியாக்குகிறோம்.

ஆனால், இயற்கை தனது பாதையை மட்டுமே தேடுகிறது.

ஆற்றுக்கு வழி மறித்தால் — அது வழியை உடைத்துக்கொண்டு செல்லும்.
மலையை வெட்டினால் — அது ஒருநாள் சரிந்து விழும்.
காட்டை அழித்தால் — மழையின் தாக்கம் அதிகரிக்கும்.
வெள்ளப்பாதையில் கட்டிடம் கட்டினால் — வெள்ளம் அதைத் தேடி வரும்.

நேபாளமும் கேரளாவும் நமக்கு சொல்லும் மிகப்பெரிய பாடம் இதுதான்:

“இயற்கையை அழித்து கிடைக்கும் சந்தோஷம் தற்காலிகம்;

இயற்கையை அழித்ததன் விளைவு நம்மையே அழித்துவிடும்!”

எனவே, வளர்ச்சி என்ற பெயரில் மலைகளையும், காடுகளையும், ஆறுகளையும் அழிப்பதைத் தடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் விதிகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும். இயற்கையின் எல்லைகளை மதித்து மட்டுமே கட்டுமானங்களும் வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட வேண்டும்.

இயற்கையை பாதுகாப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடமை மட்டுமல்ல; அது ஒவ்வொரு மனிதனின் உயிர் பாதுகாப்புக்கான போராட்டம்.

இன்று இயற்கையை காப்போம்…
நாளை நம்மையும், நம் தலைமுறையையும் காப்போம்!

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#ClimateChange #EnvironmentalProtection #KeralaFloods #Nature #NepalFloods #Tngovt
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதீ வந்தால் திணறாதீங்க… தீயணைப்பானை தூக்கிப் பிடிங்க! – துறையூரில் ‘தீ’ பாதுகாப்புப் பயிற்சி
Next Article ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ரூ.10 லட்சத்தில் நலவாழ்வு மையம் திறப்பு
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.