Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Friday, September 11
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தீ வந்தால் திணறாதீங்க… தீயணைப்பானை தூக்கிப் பிடிங்க! – துறையூரில் ‘தீ’ பாதுகாப்புப் பயிற்சி

தீ வந்தால் திணறாதீங்க… தீயணைப்பானை தூக்கிப் பிடிங்க! – துறையூரில் ‘தீ’ பாதுகாப்புப் பயிற்சி

தினக்கதிர்By தினக்கதிர்August 28, 20261 Min Read188 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திருச்சி மாவட்டம், துறையூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில், துறையூர் பகுதியில் உள்ள தனியார் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பாதுகாவலர்கள் பங்கேற்றனர்.

இதில், மின்சாரத்தால் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது, சமையல் எரிவாயு உருளையில் தீப்பற்றும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், எரிபொருள் கசிவால் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் விளக்கினர்.

மேலும், தீயணைப்புக் கருவிகளை முறையாகக் கையாளும் விதம், கட்டடங்களில் தீ விபத்து ஏற்படும் போது தீயணைப்பானை (Fire Extinguisher) பயன்படுத்தும் முறை ஆகியவை செயல்விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டன.

பாதுகாவலர்கள் அவசர காலங்களில் பதற்றமின்றி செயல்பட்டு, தீ விபத்துகளைத் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்துவதற்கான அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் துறையூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் பழனிச்சாமி, சுப்பிரமணியன், ஜெயராமன், ஜாகிர், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#BreakingNews #FireSafety #FireSafetyTraining #tamil #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #TamilNews #Thuraiyur #Tngovt #Trichy #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதூய நெஞ்சக் கல்லூரி சார்பில் இரு நாள் சமூக விரிவாக்க நிகழ்ச்சி
Next Article பேரழிவை உருவாக்கியது இயற்கையா? பேராசையா? — நேபாளமும் கேரளாவும் சொல்லும் பாடம்!
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.