Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்

எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்

தினக்கதிர்By தினக்கதிர்August 20, 20261 Min Read198 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை அமல்: 5-வது பணம் எடுப்புக்கு ரூ.15 + ஜி.எஸ்.டி.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBD) வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கான பணம் எடுக்கும் விதிமுறைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி, BSBD கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் 4 முறை வரை பணம் எடுப்பதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. வங்கி கிளை மற்றும் ஏ.டி.எம். மூலம் மேற்கொள்ளப்படும் பணம் எடுக்கும் பரிவர்த்தனைகள் இந்த வரம்பில் கணக்கிடப்படும்.

ஆனால், ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், 5-வது பரிவர்த்தனை முதல் ஒவ்வொரு பணம் எடுப்புக்கும் ரூ.15 மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

மேலும், ஆதார் அடிப்படையிலான பணம் எடுக்கும் சேவை (AePS) பரிவர்த்தனைகளும் இனி இலவச பணம் எடுக்கும் வரம்பில் சேர்க்கப்படும். ஏ.டி.எம். அல்லது வங்கி கிளை மூலம் பணம் எடுத்த பின்னர் AePS முறையில் பணம் எடுத்தாலும் அது மாதாந்திர வரம்பில் கணக்கிடப்படும்.

அதே நேரத்தில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு தொடர்ந்து கட்டணம் இல்லை என வங்கி தெரிவித்துள்ளது.

BSBD கணக்கு என்றால் என்ன?

அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBD) என்பது குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டிய அவசியமில்லாத சேமிப்பு கணக்கு ஆகும். பொதுமக்கள் எளிதாக வங்கி சேவைகளை பெறும் வகையில் இந்த கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய விதிமுறை அமலுக்கு வருவதால், அடிக்கடி ரொக்கப் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது பணப் பரிவர்த்தனைகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#AIADMK #BankRules #BreakingNews #CMJosephVijay #india #sbi #StateBankOfIndia #tamil #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #TamilNews #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article“21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: பேரவைத் தலைவர் முடிவு செல்லும்”
Next Article 8 மீட்டர் சாலையில் 5.5 மீட்டருக்கு மட்டுமே தார்சாலை..?
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.