Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » திருப்பெரும்புதூரில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு: அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு தொடங்கி வைத்தார்

திருப்பெரும்புதூரில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு: அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு தொடங்கி வைத்தார்

AdminBy AdminJuly 28, 20261 Min Read33 ViewsUpdated:July 28, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை, மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி.கே. தென்னரசு இன்று திறந்து வைத்தார்.

இந்த புதிய அங்கன்வாடி மையம், கான்ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரி (CII) மூலம் BorgWarner Cooling Systems நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) நிதியான ரூ.26 லட்சம் செலவில் கட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி தி. சினேகா, இ.ஆ.ப. தலைமை தாங்கினார்.

பழுதடைந்திருந்த பழைய அங்கன்வாடி மையத்தை அகற்றி, சுமார் 800 சதுர அடி பரப்பளவில் வகுப்பறை, சமையலறை, தனி கழிப்பறை, குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது.

புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு, குழந்தைகளுடன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், சிறப்பான வசதிகளுடன் அங்கன்வாடி மையத்தை அமைத்துக் கொடுத்த BorgWarner நிறுவன நிர்வாகத்தினருக்கு பாராட்டு தெரிவித்து கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. பார்த்திபன், திருமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி என். ரேகா நரேஷ்குமார், CII தலைவர் திரு. எஸ். நரசிம்மன், BorgWarner நிறுவன மேலாண்மை இயக்குநர் திரு. சைலேஷ் ஜா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி கிருஷ்ணவேணி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பவானி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Author

  • Admin
    Admin
#AIADMK #Kanchipuram #NutritionForChildren #PublicInfrastructure #SPKThennarasu #Sriperumbudur #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleமருத்துவமும் மனிதநேயமும் இணைந்த நாள்: திருப்பத்தூரில் மாபெரும் நலத்திட்ட முகாம்
Next Article வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லத் தடை..!
Admin
  • Website

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.