சேலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி கிளப் சிகரம் மற்றும் ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி இன்று சிறப்பாக நடைபெற்றது.
பேரணியை சேலம் மாநகர காவல் ஆணையர் கே. ஜோஷி நிர்மல் குமார், ஐபிஎஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ரோட்டெரியன் ரமேஷ்பாபு (மாவட்ட பொது பிம்பத் தலைவர்), ரோட்டேரியன் நிர்மலா (உதவி ஆளுநர்), ரோட்டெரியன் கே. வசுமதி (மாவட்ட புதிய தலைமுறைத் தலைவர்), டாக்டர் ஜெயந்தி ஹெச்.(முதல்வர், ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி), ரோட்டேரியன் கார்லின் எபி (நிகழ்ச்சி தலைவர்) உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், ரோட்டரி கிளப் சிகரம் உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நூற்றுக்கணக்கான மாணவியரும் ரோட்டேரியன்களும் ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் இருந்து ஹோலி கிராஸ் பள்ளி வரை பேரணியாகச் சென்று, போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
“போதை இல்லா சமுதாயமே வலிமையான சமுதாயம்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்தப் பேரணி, போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக சமூகத்தில் விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்தது.

இதுகுறித்து ரோட்டரி கிளப் ஆஃப் சிகரம் தலைவர் கூறுகையில், “சமுதாய நலனுக்காக இதுபோன்ற அர்த்தமுள்ள சேவை திட்டத்தை முன்னின்று பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்… ஒன்றிணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்… ஒன்றிணைந்து போதை இல்லா எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்” என்று தெரிவித்தார்.

