Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » பெங்களூரில் ‘பஞ்ச திராவிடக் கவிஞர்கள் சங்கமம்’ மற்றும் ‘தோடல் நுடி’ இதழின் 13-ஆம் ஆண்டு மலர் வெளியீட்டு விழா..!

பெங்களூரில் ‘பஞ்ச திராவிடக் கவிஞர்கள் சங்கமம்’ மற்றும் ‘தோடல் நுடி’ இதழின் 13-ஆம் ஆண்டு மலர் வெளியீட்டு விழா..!

AdminBy AdminJune 25, 20262 Mins Read178 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திராவிட மொழி பெயர்ப்பாளர்கள்ச் சங்கம் (DBTA) மற்றும் ‘தொடல் நுடி’ கன்னடக் குழந்தைகள் இலக்கிய மாத இதழ் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், பெங்களூர் ஒயிட்பீல்டில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி எஜுகேஷன் டிரஸ்டில் கடந்த 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று “பஞ்ச திராவிடக் கவிஞர் சங்கமம்” மற்றும் ‘தொடல் நுடி’ இதழின் 13-ஆவது ஆண்டு மலர் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 இவ்விழாவில் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் துளு ஆகிய பஞ்ச திராவிட மொழிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு மாநிலங்களிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்துகொண்டு தங்களது கவிதைகளை வாசித்தனர். 

 மொழிகளின் பன்முகத்தன்மையையும் இலக்கிய ஒற்றுமையையும் பறைசாற்றும் விதமாக அமைந்த இக்கவிதைகள் பார்வையாளர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தன. பஞ்ச திராவிட மொழிக் கவிஞர்களின் இந்தச் சங்கமம், 'பஞ்சாமிர்தம்' பருகியது போன்ற இனிமையானதொரு நல்அனுபவத்தை வழங்கியது.

 DBTA தலைவர் டாக்டர் சுஷ்மா சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவை, ‘சுட்டுக்கவிதைச் சக்கரவர்த்தி’ என்று புகழ்பெற்ற பிரபல கன்னடக் கவிஞர் எச். துந்திராஜ் தொடங்கி வைத்தார். இலக்கியத்திற்கும் மொழி நல்இணக்கத்திற்கும் புதிய திசையை உருவாக்கும் தளமாக இச்சங்கமம் அமைந்துள்ளது என்று அவர் பாராட்டினார்.

பிரபல தமிழ்க் கவிஞரும், ‘தடாகம்’ இலக்கிய அமைப்பின் நிறுவனருமான டாக்டர் க.வடிவழகி தேவசகாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ‘தொடல் நுடி’ மாத இதழின் 13-ஆவது ஆண்டு மலரை DBTA ஆலோசகர் டாக்டர் நா. தாமோதர ஷெட்டி வெளியிட்டு, குழந்தைகளிடம் தாய்மொழிப் பற்றையும் வாசிப்புப் பழக்கத்தையும் வளர்ப்பதில் இவ்விதழின் பங்களிப்பைப் பாராட்டினார்.

 முன்னதாக, DBTA செயலாளர் திரு. கே. பிரபாகரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பேராசிரியர் ராகேஷ் வி.எஸ். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, செயற்குழு உறுப்பினர் திரு. ரபின் ரவீந்திரன் ஒருங்கிணைப்புப் பணிகளைச் செவ்வெனச் செய்திருந்தார்.

 விழாவில் பல்வேறு திராவிட மொழிக் கவிதைகள் குறித்த ஆய்வுக் கருத்துகளைப் பேராசிரியர்களும் அறிஞர்களும் விரிவாகப் பகிர்ந்து கொண்டனர். தமிழ்: டாக்டர் மலர்விழி, மலையாளம் & கன்னடம்: திருமதி மாயா பி. நாயர்,தெலுங்கு: டாக்டர் மால்யாத்ரி,துளு: டாக்டர் பி.எஸ். சிவகுமார், இவ்விழாவின் தமிழ்ப் பிரிவில் கவிஞர்கள் தீபலோசனி கார்த்திக், நாகம்மாள் நீலகாந்தன், எஸ். வி.ஆர். மூர்த்தி, மா. வித்யா மற்றும் டாக்டர் சரளா புருஷோத்தமன் ஆகியோர் தங்களின் கவிதைகளை வாசித்து இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திப் பாராட்டைப் பெற்றனர்.

 பல்வேறு திராவிட மொழிக் கவிஞர்களை ஒரே மேடையில் ஒன்றிணைத்த இந்த விழா, வேற்றுமையில் ஒற்றுமையைப் பறைசாற்றுவதுடன், திராவிட மொழிகளுக்கு இடையே பரஸ்பர பாச நல்லுறவையும் இலக்கிய நேசத்தையும் மேன்மேலும் வளர்க்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது எனத் தலைவர் டாக்டர் சுஷ்மா சங்கர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Author

  • Admin
    Admin
#BengaluruEvents #DBTA #DravidianLiterature #india #TamilNaduNews #TamilNaduPolitics #கவிதைசங்கமம் #கன்னடஇலக்கியம் #தமிழ்இலக்கியம் #தோடல்நுடி
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleமசினகுடியில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை சாதுரியமாகப் பூட்டிய உரிமையாளர்..!
Next Article தவம் கிடக்கும் கொடைக்கானல் மக்கள்.. தலைமறைவான அதிகாரிகள்.!; மாவட்ட ஆட்சியர் தலையிடக் கோரிக்கை..!
Admin
  • Website

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.