Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

திருப்பெரும்புதூரில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு: அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு தொடங்கி வைத்தார்

July 28, 2026

மருத்துவமும் மனிதநேயமும் இணைந்த நாள்: திருப்பத்தூரில் மாபெரும் நலத்திட்ட முகாம்

July 28, 2026

சேலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: காவல் ஆணையர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..

July 28, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Tuesday, July 28
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » ஒட்டன்சத்திரத்தில் புதிய துறைமுகம் : சாத்தியக்கூறுகளை ஆராய மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

ஒட்டன்சத்திரத்தில் புதிய துறைமுகம் : சாத்தியக்கூறுகளை ஆராய மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

Ravikumar KBy Ravikumar KJune 22, 20262 Mins Read452 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

“மழை பெய்ஞ்சா ரோடு ஏரியாகும்னு கேள்விப்பட்டிருக்கோம்… ஆனா, துறைமுகமாவே மாறும்னு இப்பதான் பார்க்குறோம்!” – இப்படி ஒரு நூதனமான, அதேசமயம் அதிகாரிகளுக்குச் சுருக் என்று உறைக்கும்படியான புகாரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி பரபரப்பைக் கிளப்பியுள்ளனர் ஒட்டன்சத்திரம் பகுதி பொதுமக்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி சந்தை அமைந்துள்ளது. இதன் முன்பாகச் செல்லும் SNH-381 தேசிய நெடுஞ்சாலையில், மழைக்காலங்களில் 3 முதல் 4 அடி உயரம் வரை தண்ணீர் தேங்குவது காலங்காலமாக நடக்கும் ‘வழக்கமான’ ஒரு திருவிழாவாகவே மாறிவிட்டது.

நேற்று பெய்த லேசான மழைக்கே இந்த ரோடு, சுந்தரபாண்டியன் பட பாணியில் கடலாக மாறியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் “ரோட்டுல போறோமா… இல்ல ஆத்துல போறோமா?” என்று தெரியாமல் திணறிப் போயுள்ளனர்.

இப்பிரச்சினை குறித்து ‘நீதியின் கண் சமூக நலக்குழு’ தலைவர் நவீன்குமார் மணிவண்ணன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி. துர்கா மூர்த்தி (இ.ஆ.ப) அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் அதிகாரிகளின் அலட்சியத்தை வெளுத்து வாங்கியுள்ளார்.

“ஏற்கனவே இந்த ரோட்டுல ‘நீச்சல் போட்டி’ நடத்தலாம்னு நாங்க காமெடி பண்ணி மனு கொடுத்தும் அதிகாரிகள் அசரல. இப்போ மக்கள் வேற லெவல்ல யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மழைநீர் தேங்குவதால் கடுப்பான பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு மரண மாஸான கிண்டல் கேள்வியைக் கணையாக வீசியுள்ளனர்:

  • மழைநீர் தேங்கும் ஆழம்: சாலையில் தேங்கும் நீரின் ஆழத்தைப் பார்த்தால், அதில் சின்ன சைஸ் படகுகளையே ஓட்டலாம் போலிருக்கிறது.
  • மக்களின் ஐயம்: “ஒருவேளை தமிழக அரசும் மத்திய அரசும் சேர்ந்து யாருக்கும் தெரியாம தங்கச்சியம்மாபட்டி பகுதியில புதுசா ஏதும் ‘இன்டர்நேஷனல் போர்ட்’ (புதிய துறைமுகம்) கட்ட பிளான் பண்ணுறாங்களோ?” என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள்.
  • முன்மாதிரி திட்டம்: மழைநீர் வடிகால் கட்டாமல் இழுத்தடிப்பதைப் பார்த்தால், எதிர்கால துறைமுகத் திட்டத்திற்கான ‘டெமோ’ தான் இந்த தேசிய நெடுஞ்சாலையோ என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, தங்கச்சியம்மாபட்டி பகுதியில் துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் ஏதேனும் ரகசியமாக நடக்கிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்.

அப்படி எந்த திட்டமும் ‘உள்நோக்கத்தோடு’ செய்யப்படவில்லை என்றால், தயவுசெய்து அந்த தேசிய நெடுஞ்சாலையை மீண்டும் தேசிய நெடுஞ்சாலையாகவே வாழ விடுங்கள்! மழைநீர் தேங்காதபடி உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிரந்தர வடிகால் வசதி அமைத்துத் தாருங்கள் என அந்த மனுவில் கிண்டலும் ஆதங்கமும் கலந்த கோரிக்கையை நவீன்குமார் மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது ஒட்டன்சத்திரம் மக்கள் கப்பல் வாங்க ரெடியாக வேண்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Author

  • Ravikumar K
#Dindigul #odc #TamilNaduNews #TamilNaduPolitics #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleமுதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோனேரிராஜபுரத்தில் இரத்ததான முகாம்..!
Next Article தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!
Ravikumar K
  • Website

Related Posts

News

திருப்பெரும்புதூரில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு: அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு தொடங்கி வைத்தார்

July 28, 2026
News

மருத்துவமும் மனிதநேயமும் இணைந்த நாள்: திருப்பத்தூரில் மாபெரும் நலத்திட்ட முகாம்

July 28, 2026
News

சேலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: காவல் ஆணையர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..

July 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,054 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

திருப்பெரும்புதூரில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு: அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு தொடங்கி வைத்தார்

July 28, 2026015 ViewsRavikumar K

மருத்துவமும் மனிதநேயமும் இணைந்த நாள்: திருப்பத்தூரில் மாபெரும் நலத்திட்ட முகாம்

July 28, 20260124 ViewsRavikumar K

சேலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: காவல் ஆணையர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..

July 28, 20260122 ViewsRavikumar K

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,054 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Our Picks

திருப்பெரும்புதூரில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு: அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு தொடங்கி வைத்தார்

July 28, 2026

மருத்துவமும் மனிதநேயமும் இணைந்த நாள்: திருப்பத்தூரில் மாபெரும் நலத்திட்ட முகாம்

July 28, 2026

சேலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: காவல் ஆணையர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..

July 28, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.