15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசு வாகனங்கள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக G.O.(Ms) No.326, Home (Transport-IV) Department, dated 29.09.2026 வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு துறைகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 40,296 வாகனங்களின் பதிவு சான்றிதழ் (RC) செல்லுபடியாகும் காலம் 30.09.2027 வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், 15 ஆண்டுகளை கடந்தும் இன்னும் பயன்பாட்டில் இருந்து, மாற்று வாகனங்கள் வாங்கப்படும் வரை ஸ்கிராப் செய்யப்படாத அரசு வாகனங்களின் RC-யை ஆண்டுதோறும் கைமுறையாக (Manual) நீட்டித்து, அதிகபட்சம் 30.09.2035 வரை செல்லுபடியாக வைத்திருக்க மாநில போக்குவரத்து ஆணையம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
01.10.2026 முதல் கைமுறையாக பதிவு புதுப்பிக்க வேண்டிய வாகனங்களுக்கு, வரி வசூல் மற்றும் Fitness Certificate வழங்குதல்/புதுப்பித்தல் ஆகியவற்றையும் RTO அலுவலர்கள் மேற்கொள்ளலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, புதிய வாகனங்கள் மாற்றீடு செய்யப்படும் வரை அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் பழைய வாகனங்களின் நிர்வாகப் பயன்பாட்டை தொடர்வதற்கான வழிவகையாக அமைந்துள்ளது.

