Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, October 26
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » டேட்டா இல்லாமல் வாய்ஸ், எஸ்.எம்.எஸ். திட்டங்கள்: டிராய் புதிய உத்தரவு

டேட்டா இல்லாமல் வாய்ஸ், எஸ்.எம்.எஸ். திட்டங்கள்: டிராய் புதிய உத்தரவு

தினக்கதிர்By தினக்கதிர்October 2, 20261 Min Read85 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

டேட்டா சேவை தேவையில்லாத நுகர்வோருக்காக, வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் பிரத்யேக திட்டங்களை வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, ‘தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13-ஆவது திருத்தம்) விதிகள், 2026’-ஐ டிராய் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 30 நாள்கள் அல்லது அதற்கும் குறைவான செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட வாய்ஸ், எஸ்.எம்.எஸ். சேவைகளுக்கான பிரத்யேக சிறப்பு கட்டணத் திட்டங்களை (STV) வழங்க வேண்டும்.

மேலும், மாதந்தோறும் ஒரே தேதியில் புதுப்பித்துக் கொள்ளும் வகையிலான திட்டத்தையும் வழங்க வேண்டும். குறிப்பிட்ட தேதி இல்லாத மாதங்களில், அந்த மாதத்தின் கடைசி நாள் புதுப்பிப்பு தேதியாகக் கொள்ளப்படும்.

இதுதவிர, 30 நாள்களுக்கும் அதிகமான செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட குறைந்தபட்சம் ஒரு வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். பிரத்யேகத் திட்டத்தையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

2024-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 12-ஆவது திருத்தத்துக்குப் பிறகு, டேட்டா இல்லாத வாய்ஸ், எஸ்.எம்.எஸ். திட்டங்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை நீண்டகாலத் திட்டங்களாக இருந்ததாகவும் டிராய் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, குறைந்த வருவாய் கொண்டவர்கள் மற்றும் டேட்டா சேவை தேவையில்லாத நுகர்வோரின் தேவையை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 7, 2026-இல் வரைவு திருத்தம் வெளியிடப்பட்டு கருத்துகள் கோரப்பட்டன. இதில் 1,132 கருத்துகள் பெறப்பட்டன. தொடர்ந்து, ஜூன் 15-ஆம் தேதி பங்குதாரர்களுடன் திறந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பெறப்பட்ட கருத்துகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் புதிய திருத்த விதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன

இதன் மூலம், டேட்டா சேவையைப் பயன்படுத்தாத நுகர்வோர் தங்களது தேவைக்கும் நிதி வசதிக்கும் ஏற்ப குறைந்த செலவில் வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளை மட்டும் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்யும் வாய்ப்பு ஏற்படும் என டிராய் தெரிவித்துள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#DigitalIndia #mobilerecharge #SMSPlans #TamilNews #TRAI #VoiceOnlyPlans
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதுபாய்–டெல் அவிவ் விமானத்தில் பரபரப்பு; சமயோசிதமாக செயல்பட்ட கேப்டன்
Next Article 15 ஆண்டுகள் கடந்த அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு !
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026
Dinakkadir

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026
Dinakkadir

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,123 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20262,107 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,367 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.