Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

புதுப்பதி கிராமத்துக்குள் புகுந்த யானைகள்: குட்டியுடன் ஆற்றில் நீராடி வனத்துக்குத் திரும்பின

September 19, 2026

ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி: திமுக நிர்வாகி உள்ளிட்டோர் மீது FIR பதிவு

September 19, 2026

ஒரே இடத்தில் 5, 10 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் விவரம் சேகரிப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

September 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 19
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி: திமுக நிர்வாகி உள்ளிட்டோர் மீது FIR பதிவு

ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி: திமுக நிர்வாகி உள்ளிட்டோர் மீது FIR பதிவு

தினக்கதிர்By தினக்கதிர்September 19, 20261 Min Read47 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததாக எழுந்த புகாரில், திமுக நிர்வாகி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் கோயில் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, சுமார் ரூ.50 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ளதாக கூறப்படும் நிலம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சிலர் போலி பட்டா மற்றும் போலியான தாய் ஆவணங்கள் தயாரித்து, தங்களுக்கு உரிமை இருப்பது போல காட்டி பத்திரப்பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் உள்ளிட்டோர் மீது போலி ஆவணம் தயாரித்தல், மோசடி செய்தல், சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த நிலப்பதிவில் தொடர்புடைய ஆவணங்கள், பத்திரப்பதிவு நடைமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் பங்கு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவு:

கோயில் நிலங்களை முறைகேடாக பதிவு செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள நிலையில், கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்வதற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பத்திரப்பதிவு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் பங்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#HRCE #Srirangam #TempleLand #Tngovt #Trichy #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஒரே இடத்தில் 5, 10 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் விவரம் சேகரிப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு
Next Article புதுப்பதி கிராமத்துக்குள் புகுந்த யானைகள்: குட்டியுடன் ஆற்றில் நீராடி வனத்துக்குத் திரும்பின
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

புதுப்பதி கிராமத்துக்குள் புகுந்த யானைகள்: குட்டியுடன் ஆற்றில் நீராடி வனத்துக்குத் திரும்பின

September 19, 2026
Dinakkadir

ஒரே இடத்தில் 5, 10 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் விவரம் சேகரிப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

September 19, 2026
Dinakkadir

மம்தா அணிக்கு புதிய பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

September 18, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,094 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,972 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,341 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.