Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » அரசு ஊழியர்கள்  அலுவலகம் கொண்டு வரும்  பணத்திற்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள்  அலுவலகம் கொண்டு வரும்  பணத்திற்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தினக்கதிர்By தினக்கதிர்August 30, 20261 Min Read250 ViewsUpdated:August 30, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கொண்டு வரும் சொந்த பணத்திற்கு உரிய வரம்பை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சார்-பதிவாளராக கடந்த 2021-ம் ஆண்டு பணியாற்றிய கலா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மனுவில், “லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.45 ஆயிரம் வைத்திருந்ததாக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த பணம் திருமண செலவுக்காக வைத்திருந்தது.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

அரசு தரப்பில், “பணியில் இருக்கும் அலுவலர்கள் வைத்திருக்க வேண்டிய பண வரம்பு மற்றும் பதிவேடுகள் பராமரிப்பு தொடர்பாக பதிவுத்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி கூறியதாவது:
பதிவுத்துறை மட்டுமே இதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான வழிகாட்டுதல்களோ அல்லது அரசாணையோ இல்லை.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் நடைபெறும் நிலையில், அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கொண்டு வரும் சொந்த பணத்திற்கு உரிய வரம்பை அரசு நிர்ணயிக்க வேண்டும்.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்த உதவுவதுடன், அரசு ஊழியர்கள் தேவையற்ற சிரமங்களுக்கு உள்ளாவதையும் தடுக்கும்.

ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க இதுபோன்ற வழிகாட்டுதல்கள் அவசியம் என நீதிபதி தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு செப்டம்பர் 3-ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#AntiCorruption #GovernmentEmployees #HighCourt #MaduraiBench #TamilNadu #TamilNews #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஉள்ளேயும் வெளியேயும் அதிகரிக்கும் பூமியின் வெப்பத்தை ஒழிப்பது எப்படி? திருவள்ளுவர்…
Next Article எல்ஜி, எவரெஸ்ட் பெருங்காயத் தூள் விற்பனைக்கு தடை
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.