Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Friday, September 11
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » “லஞ்சத்துக்கும் ஆன்லைன் வசதி… அதிகாரிகளுக்கு ‘டிஜிட்டல் ஷாக்’ கொடுத்த சோதனை!”

“லஞ்சத்துக்கும் ஆன்லைன் வசதி… அதிகாரிகளுக்கு ‘டிஜிட்டல் ஷாக்’ கொடுத்த சோதனை!”

தினக்கதிர்By தினக்கதிர்August 27, 20261 Min Read413 ViewsUpdated:August 28, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை: 35 அரசு அலுவலகங்களில் ரூ.1.18 கோடி முறைகேடு அம்பலம்!

தமிழகம் முழுவதும் 35 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரொக்கம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.1.18 கோடி மதிப்பிலான பணம் கண்டறியப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள், மாவட்ட ஆய்வு அதிகாரிகளுடன் இணைந்து 27.08.2026 அன்று பல்வேறு அரசு அலுவலகங்களில் ஒரே நேரத்தில் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

இதில், கணக்கில் வராத ரூ.28.24 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கூகுள் பே (G-Pay) உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.89.89 லட்சம் தொகை கண்டறியப்பட்டது.

சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

கிண்டியில் உள்ள முதன்மை மின்சார ஆய்வாளர் அலுவலகத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூ.31.52 லட்சம் மதிப்பிலான ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்களை கட்டுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த சோதனை, அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#BreakingNews #DigitalIndia #DVAC #india #IndiaNews #LocalNews #tamil #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #TamilNews #Tngovt #TVK #லஞ்சஒழிப்புத்துறை
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article“21 சார் பதிவாளர்கள் திடீர் பணியிட மாற்றம்: பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் அதிரடி உத்தரவு!
Next Article குன்னூர் “தீயணைப்பு நிலையம் தள்ளாடுது… புதிய கட்டடம் தவழுது!”
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.