நாட்டின் சிறந்த முதல்வர்களில் மு.க.ஸ்டாலின் ஒருவர் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே பாராட்டி உள்ளார். தென் இந்தியாவில் தனது அமைப்பை வலுப்படுத்த, திமுகவுடன் இணைந்து செயல்பட, அபிஜித் திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக அண்மையில் டெல்லி ஜந்தர் மந்தரில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தனர். எவருக்குமே இறங்கி வராத மத்திய அரசு, கரப்பான் பூச்சி கட்சியினர், ஜென் ஸி தலைமுறையினரின் போராட்டத்துக்கு இறங்கி வந்தது; அவர்களின் கோரிக்கையின்படி, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், பதவி விலகினார்.
இதன்பின்னர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் பெயர் உலகளவில் பிரபலமானது. குறிப்பாக, அதன் தலைவர் அபிஜித், ஒரு விஐபி அந்தஸ்தை பெற்றார். அவரது அரசியல் செயல்பாடுகள், மக்கள் மத்தியில் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கலந்துரையாடினார். அப்போது நாட்டின் நாட்டின் சிறந்த முதலமைச்சர் யார் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அபிஜித், தமிழக முன்னாள் மு.க. ஸ்டாலின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முன்னாள் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, மு.க. ஸ்டாலின் சிறப்பாகப் பணியாற்றினார். பினராயி விஜயன் கேரளாவின் சுகாதார மேம்பாட்டிற்காகவும், அரவிந்த் கெஜிரிவால் டெல்லியின் கல்வி மேம்பாட்டிற்காகவும் சிறப்பாகச் செயல்பட்டனர் என்று அபிஜித் தீப்கே புகழ்ந்து தள்ளினார்.
ஆனால், அபிஜித்தின் இந்த கருத்துக்கு பாஜக முன்னாள் நிர்வாகி பூனாவாளா எதிர்வினையாற்றி உள்ளார். அவர் “நாட்டின் சிறந்த முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கேஜரிவால். பின்னர் மக்கள் அவர்களை நிராகரித்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, திமுக, ஆம் ஆத்மி கட்சிகளை பாரட்டி இருப்பதன் மூலம் தனது அரசியல் இருப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் திமுக வலுவாக உள்ளது; பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் திமுகவுடன் கைகோர்ப்பது, அரசியல் களத்தில் உதவிகரமாக இருக்கும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நினைப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

