சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த 20 அதிகாரிகளுக்குக் குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் மூவருக்குச் ‘சிறப்பான சேவைக்கான பதக்கமும்’ (Medal for Distinguished Service), 17 பேருக்கு ‘பாராட்டுக்குரிய சேவைக்கான பதக்கமும்’ (Medal for Meritorious Service) வழங்கப்படுகின்றன.

  • கே. ராமச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC), விருதுநகர்;
  • ஜே. விஜய் ஆனந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ‘க்யூ’ பிரிவு சிஐடி (Q Branch CID), தலைமையகம், சென்னை;
  • எஸ். குமார், உதவித் தளபதி (Assistant Commandant), 9-வது பட்டாலியன், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, மணிமுத்தாறு; — ஆகிய மூவருக்கும் ‘சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம்’ வழங்கப்படுகிறது.
  • எம். சோமசுந்தரம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையகம், சேலம் மாவட்டம்;
  • கே. சிவசங்கர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், கடலோரப் பாதுகாப்புக் குழுமம், நாகப்பட்டினம் மண்டலம்;
  • பி. கோவிந்தராஜு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையகம், திருப்பத்தூர் மாவட்டம்;
  • எஸ். சண்முகம், காவல் துணைக் கண்காணிப்பாளர், முதுகுளத்தூர் உட்கோட்டம், ராமநாதபுரம் மாவட்டம்;
  • எஸ். மணிமாறன், உதவித் தளபதி, 13-வது பட்டாலியன், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, ஆவடி;
  • ஐ. ஜெயா பிரின்சஸ், காவல் ஆய்வாளர், குற்றப் பிரிவு சிஐடி, தூத்துக்குடி மாவட்டம்;
  • சி. மதிமாறன், காவல் ஆய்வாளர், சிறப்புப் பிரிவு சிஐடி, சென்னை;
  • பி. மாரியப்பன், காவல் ஆய்வாளர், பாதுகாப்புப் பிரிவு சிஐடி, சென்னை;
  • கே. சரஸ்வதி, காவல் ஆய்வாளர், குற்றப் பிரிவு சிஐடி, நீலகிரி மாவட்டம்;
  • எஸ். லட்சுமி, காவல் ஆய்வாளர், கள்ள நோட்டுத் தடுப்புப் பிரிவு, குற்றப் பிரிவு சிஐடி, திருச்சி; * ஜி. பத்ருன்னிசா பேகம், காவல் ஆய்வாளர், நகரக் குற்ற ஆவணப் பிரிவு (CCRB), திருப்பூர் மாநகரம்;
  • கே. கோபால், காவல் ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத் துறை, சென்னை;
  • சி. லட்சுமி, காவல் ஆய்வாளர், ‘க்யூ’ பிரிவு சிஐடி, சென்னை;
  • எஸ். மாலதி, காவல் ஆய்வாளர், சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு, சென்னை;
  • என். சதுரகிரி, காவல் உதவி ஆய்வாளர், ‘க்யூ’ பிரிவு சிஐடி (Q Branch CID), சென்னை;
  • ஆர். செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர், சிறப்புப் பிரிவு, திருச்சி மாவட்டம்;
  • எஸ். பாஸ்கர், காவல் உதவி ஆய்வாளர், உளவுப் பிரிவு, பெருநகரக் காவல் துறை, சென்னை;

—ஆகிய 17 பேருக்குச் சிறப்பான பணிக்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு, காவல் துறைப் பணியாளர்களுக்குச் சிறந்த பணிக்கான பதக்கங்கள் மற்றும் சிறப்பான பணிக்கான பதக்கங்களை ஆண்டுக்கு இருமுறை—குடியரசு தினம் (ஜனவரி 26) மற்றும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) ஆகிய நாட்களில்—வழங்கி வருகிறது.

தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த 20 பேருக்கு ஒரே நேரத்தில் குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளமையானது, அவர்களின் மிகச் சிறந்த காவல் பணிக்குக் கிடைக்கும் தேசிய அளவிலான அங்கீகாரமாக அமைகிறது.

Author

Share.
Leave A Reply

Exit mobile version