சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு.ஆர்.சி.பால் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சங்கத்தின் துணைத் தலைவர் திரு.எஸ்.சசிகுமார், செயலாளர் திரு.எஸ்.அறிவழகன், பொருளாளர் திரு.ஜி.ராஜேஷ், நூலகர் திரு.வி.எம்.ரகு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
சந்திப்பின்போது, வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


