சுதந்திர தினத்தை முன்னிட்டு (15.08.2026),புலனாய்வுப் பணி மற்றும் சிறந்த பொதுச் சேவையில் சிறப்பாகச் செயலாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பதக்கம் பெறும் அதிகாரிகளுக்கு தலா 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்க வெகுமதியும் தமிழ்நாடு முதலமைச்சரால் நடைபெறும் தனி விழாவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலன் விசாரணைக்கான முதலமைச்சரின் சிறப்புப் பணிப் பதக்கங்கள்
சிறந்த புலனாய்வு திறன், வழக்குகளை திறம்பட விசாரித்தல் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக 10 காவல் அதிகாரிகளுக்கு இப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதக்கம் பெறுவோர் விவரம்:
- சி. ஜெயஸ்ரீ – காவல் துணைக் கண்காணிப்பாளர், கும்மிடிப்பூண்டி உட்கோட்டம், திருவள்ளூர் மாவட்டம்.
- நா. தமிழரசி – காவல் துணைக் கண்காணிப்பாளர், திருவள்ளூர் உட்கோட்டம், திருவள்ளூர் மாவட்டம்.
- கொ. அழகுராஜ் – காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், கோவை மாநகரம்.
- ந. தனுசியா – காவல் துணைக் கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, திருச்சி மாநகரம்.
- சே. லதா – காவல் ஆய்வாளர், தனி சிறுவர் காவல் உதவிப் பிரிவு, கோவை மாநகரம்.
- வி. கோமதி – காவல்துறை உதவித் தலைவர் (நிர்வாகம்), காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை.
- மா. சித்ரா – காவல் ஆய்வாளர், கைகளத்தூர் காவல் நிலையம், பெரம்பலூர் மாவட்டம்.
- ரா. வினோதா – காவல் ஆய்வாளர், மேல்மலையனூர் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்.
- கோ. மகாலெட்சுமி – காவல் ஆய்வாளர், மாவட்ட குற்றப் பதிவேட்டுக்கூடம், சிவகங்கை மாவட்டம்.
- ச. விஜயகுமார் – காவல் துணை ஆணையர், மேற்கு, திருநெல்வேலி மாநகரம்.
சிறந்த பொதுச் சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்

பொதுமக்கள் சேவை, காவல்துறை நிர்வாகம் மற்றும் சிறப்பான பணிக்காக 5 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பதக்கம் பெறுவோர்:
- டாக்டர் வி. சசி மோகன், இ.கா.ப. – காவல்துறை துணைத் தலைவர், திண்டுக்கல் சரகம்.
- தெ. சண்முக பிரியா, இ.கா.ப. – காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், மேற்கு சரகம், சென்னை.
- சி.எம்.ஆர். மணிமொழியன் – துணை காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
- க. மதன் மோகன் – காவல் ஆய்வாளர் (தொழில்நுட்பம்), மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை.
- மு. ரவிக்குமார் – தலைமை காவலர்-1618, கரூர் நகர காவல் நிலையம், கரூர் மாவட்டம்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதுகள், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

