Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

AdminBy AdminJuly 29, 20261 Min Read279 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் இன்று (ஜூலை 29) அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை சுமார் 7 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை, 5 தனித்தனி குழுக்களாக பிரிந்த அதிகாரிகளால் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி, அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனுடன், அவரது உதவியாளர் சுப்பிரமணி வீடு, கோயம்பள்ளியில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் (பாஸ்கர்) வீடு, கரூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம், மேலும் கோதை நகர் பகுதியில் உள்ள தொழிலதிபர்கள் கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், கணினி பதிவுகள் மற்றும் நிதி பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அல்லது பொருட்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால் கரூர் மாவட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நடவடிக்கை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

  • Admin
    Admin
#AIADMK #Breaking News #Karur #Senthil Balaji #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleபழநி கோவில் நில மோசடி வழக்கு: 3 பேரை கைது செய்த சிபிசிஐடி போலீசார்
Next Article வாடிப்பட்டி–காமராஜர் பல்கலைக்கழக வழித்தட பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்..
Admin
  • Website

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.