Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தமிழக வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: ஜி-பே (G-Pay) மூலம் லஞ்சம் வாங்கியது அம்பலம்.!

தமிழக வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: ஜி-பே (G-Pay) மூலம் லஞ்சம் வாங்கியது அம்பலம்.!

AdminBy AdminJuly 18, 20261 Min Read609 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக பெருமளவு லஞ்சம் கைமாறிய அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த மெகா சோதனையின் முடிவில், கணக்கில் காட்டப்படாத ரூ. 82 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் லஞ்சப் பணமாக அதிகாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதிகாரிகள் ரொக்கமாக லஞ்சம் பெறுவதைத் தவிர்த்து, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையான ரூ. 82.10 லட்சத்தில், ரூ. 68 லட்சத்து 32 ஆயிரம் கூகுள் பே (G-Pay) செயலி மூலமாகவே லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், அதிகாரிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் நூதன முறையில் லஞ்சம் பெற்று வருவது இந்த சோதனையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

  • Admin
    Admin
#Corruption #DVACRaid #TahsildarOffice #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #TamilNews
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleகாகிதமில்லா மக்கள் தொகை கணக்கெடுப்பு:மொபைலில் நீங்களே பதிவு செய்யலாம்..!
Next Article தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியல்: தேசிய அளவில் தமிழகம் 3-ம் இடம் பிடித்து சாதனை.!
Admin
  • Website

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.