Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

திருப்பெரும்புதூரில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு: அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு தொடங்கி வைத்தார்

July 28, 2026

மருத்துவமும் மனிதநேயமும் இணைந்த நாள்: திருப்பத்தூரில் மாபெரும் நலத்திட்ட முகாம்

July 28, 2026

சேலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: காவல் ஆணையர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..

July 28, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Tuesday, July 28
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்: திருமருகல் பகுதி விவசாயிகள் கடும் வேதனை.!

தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்: திருமருகல் பகுதி விவசாயிகள் கடும் வேதனை.!

Ravikumar KBy Ravikumar KJuly 19, 20262 Mins Read217 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் சத்தத்தைத் தாண்டி (100°F) பதிவாகி வருகிறது. கடுமையான வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன.

பசுமையாகக் காட்சியளிக்க வேண்டிய விளைநிலங்கள், போதிய தண்ணீரின்றி வெடிப்பு ஏற்பட்டு பாலைவனம் போல காட்சியளிப்பது விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப நாட்களாக சில மாவட்டங்களில் லேசான மழை பெய்த போதிலும், கடுமையான வெயில் மற்றும் விவசாயத்திற்குப் போதிய தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் நடப்பாண்டு சுமார் 2,000 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடியும், 5,000 ஏக்கரில் பருத்தி சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் ஆழ்துளை கிணறுகளை (Borewell) மட்டுமே நம்பி விவசாயிகள் இந்த சாகுபடியை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அரசு அறிவித்தபடி விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் (3 Phase Power) முறையாக வழங்கப்படுவதில்லை என்றும், பல பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், ஆழ்துளை கிணறுகள் இருந்தும் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகத் தாழ்ந்து வருவதால், சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை பயிர்களால் தாங்க முடியவில்லை. குறிப்பாக திருமருகல், ஆலத்தூர், கொத்தமங்கலம், அம்பல், திருப்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வீணாகி வருகின்றன.

“தற்போது நெற்பயிர்கள் அனைத்தும் பால் பிடிக்கும் பருவத்தில் இருக்கின்றன. இந்த இக்கட்டான சூழலில் பயிர்களுக்குத் தண்ணீர் மிகவும் அத்தியாவசியமானது. ஆனால் மின் தடையால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல், பயிர்களின் வேர் பகுதிகள் அனைத்தும் காயத் தொடங்கியுள்ளன.

நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்கள் அனைத்தும் தண்ணீரின்றி வெடித்துக் காணப்படுகின்றன. கருகும் பயிர்களைப் பார்க்கும்போது நெஞ்சம் வலிக்கிறது.”

வட்டிக்குக் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் முதலீடு செய்த உழைப்பு அனைத்தும் வீணாவதைக் கண்டு விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, கருகி வரும் குறுவை மற்றும் பருத்திப் பயிர்களைக் காப்பாற்ற திருமருகல் வட்டாரப் பகுதிக்கு தங்கு தடையின்றி முறையாக மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும் பட்சத்தில், விவசாயிகள் மீள முடியாத பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

Author

  • Ravikumar K
#FarmersIssue #SaveAgriculture #TamilNaduNews #TamilNaduPolitics #Tngovt #மின்வெட்டு
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleபத்தாண்டுகளாக சீரமைக்கப்படாத தார் சாலை: பள்ளி மாணவிகள் கண்ணீர் கோரிக்கை..
Next Article கூட்டுறவுத்துறை அமைச்சருடன் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு: ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் வலியுறுத்தல்.!
Ravikumar K
  • Website

Related Posts

News

திருப்பெரும்புதூரில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு: அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு தொடங்கி வைத்தார்

July 28, 2026
News

மருத்துவமும் மனிதநேயமும் இணைந்த நாள்: திருப்பத்தூரில் மாபெரும் நலத்திட்ட முகாம்

July 28, 2026
News

சேலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: காவல் ஆணையர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..

July 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,054 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

திருப்பெரும்புதூரில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு: அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு தொடங்கி வைத்தார்

July 28, 2026015 ViewsRavikumar K

மருத்துவமும் மனிதநேயமும் இணைந்த நாள்: திருப்பத்தூரில் மாபெரும் நலத்திட்ட முகாம்

July 28, 20260124 ViewsRavikumar K

சேலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: காவல் ஆணையர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..

July 28, 20260122 ViewsRavikumar K

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,054 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Our Picks

திருப்பெரும்புதூரில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு: அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு தொடங்கி வைத்தார்

July 28, 2026

மருத்துவமும் மனிதநேயமும் இணைந்த நாள்: திருப்பத்தூரில் மாபெரும் நலத்திட்ட முகாம்

July 28, 2026

சேலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: காவல் ஆணையர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..

July 28, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.