டாஸ்மாக் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.
டாஸ்மாக் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, பண்டிகை கால முன்பணமாக ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.33,023 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஆகவும், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், நிர்வாக ரீதியாக பல்வேறு புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

