தமிழகத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் அரசு நீண்டகாலமாக வீடு கட்டி வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கால அவகாசம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் தகுதியானவர்களுக்கு நில உரிமை வழங்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏராளமானோர் பயன்பெற்றுள்ள நிலையில், இன்னும் தகுதியான பலர் பட்டா இருப்பதாக கோரிக்கைகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தகுதி பெறும் நிலங்கள்:
நீர்நிலை, சாலை, பாதை, வனப்பகுதி அல்லது பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களாக இல்லாமல், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலமாக இருக்க வேண்டும்.
முக்கிய தகுதிகள்:
- சம்பந்தப்பட்ட இடத்தில் நீண்டகாலமாக குடியிருந்து வர வேண்டும்.
- குடியிருப்புக்கான உரிய ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
- அரசு நிர்ணயித்துள்ள வருமான வரம்புக்குள் வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும்போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் மற்றும் நீண்டகால குடியிருப்பை நிரூபிக்கும் மின் கட்டண ரசீது, சொத்து வரி அல்லது குடிநீர் கட்டண ரசீது போன்ற ஆவணங்கள் தேவைப்படலாம்.
தகுதியுள்ளவர்கள் தங்களது வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய நடைமுறையின்படி விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பல ஆண்டுகளாக பட்டாவுக்காக காத்திருக்கும் ஏழை குடும்பங்களுக்கு, இந்த ஓராண்டு நீட்டிப்பு சொந்த மனை கனவை நனவாக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வீடு கட்டி வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கால அவகாசம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் தகுதியானவர்களுக்கு நில உரிமையை வழங்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏராளமானோர் பயன்பெற்றுள்ள நிலையில், இன்னும் தகுதியான பலர் பட்டா பெறாமல் இருப்பதாக கோரிக்கைகள் எழுந்தன.