சாரதா சி.பி.எஸ்.இ. பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி எம்.ஆர். அனுநிதா, துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் மாநிலம், தென் மண்டலம் மற்றும் தேசிய அளவில் தொடர்ந்து சிறப்பான சாதனைகளைப் படைத்து, தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர், திருச்சியில் நடைபெற்ற தென் மண்டல (South Zone) போட்டிக்குத் தகுதி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் – 2025 போட்டியில் பங்கேற்று, இந்திய அணித் தேர்வுப் போட்டிக்குத் (Indian Team Trials) தகுதி பெற்றதுடன், “Renowned Shooter” என்ற சிறப்புத் தகுதியையும் பெற்றுள்ளார்.
மேலும், 2026 ஜூலை 25 அன்று திருச்சியில் நடைபெற்ற South Zone–1 துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து, தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
அடுத்த மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அனுநிதா பங்கேற்க உள்ளார்.
மாணவி அனுநிதாவின் இந்த சிறப்பான சாதனையை முன்னிட்டு, பள்ளி நிர்வாகி திரு. ராமகிருஷ்ணன், தாளாளர் திரு. பெருமாள்சாமி, செயலாளர் திருமதி சீதாலட்சுமி, முதல்வர் திரு. கனிபாண்டியன், துணை முதல்வர் திருமதி மாரீஸ்வரி, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

