Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள் குறித்து வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

September 21, 2026

வெற்றிப் பயணம் திட்டம்: முதல்வர் தலைமையில் முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்

September 21, 2026

பயிர்க்கடன் வசூலுக்கு தற்காலிக தடை: கூட்டுறவுத்துறை உத்தரவு

September 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, September 21
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » பயிர்க்கடன் வசூலுக்கு தற்காலிக தடை: கூட்டுறவுத்துறை உத்தரவு

பயிர்க்கடன் வசூலுக்கு தற்காலிக தடை: கூட்டுறவுத்துறை உத்தரவு

தினக்கதிர்By தினக்கதிர்September 21, 20261 Min Read196 ViewsUpdated:September 21, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிர்க்கடன் நிலுவை வசூல் நடவடிக்கைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கலா, இ.ஆ.ப., வழிகாட்டுதலின்படி, கூடுதல் பதிவாளர் எஸ். சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் (எண்:18/2026, நாள்:21.09.2026) இந்த அறிவுறுத்தல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-27ஆம் நிதியாண்டில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம்-2026 கீழ் பகுதி தள்ளுபடி பெற்ற சில விவசாயிகள், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தாத காரணத்தால் வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, பயிர்க்கடன் நிலுவை தொடர்பான அனைத்து வகையான வசூல் நடவடிக்கைகளையும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பயிர்க்கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் புதிய பயிர்க்கடன் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் உடனடியாகத் தெரிவித்து, முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#CropLoan #FarmersRelief #TamilNews #Tngovt #TVK #கூட்டுறவுபயிர்க்கடன்
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான வழக்கு: தொடர்புடைய அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு
Next Article வெற்றிப் பயணம் திட்டம்: முதல்வர் தலைமையில் முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள் குறித்து வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

September 21, 2026
Dinakkadir

வெற்றிப் பயணம் திட்டம்: முதல்வர் தலைமையில் முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்

September 21, 2026
Dinakkadir

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான வழக்கு: தொடர்புடைய அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

September 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,104 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,983 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,347 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.