Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, October 26
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு: நவம்பர் 21-ல் நடைபெறும்

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு: நவம்பர் 21-ல் நடைபெறும்

தினக்கதிர்By தினக்கதிர்October 7, 20261 Min Read271 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

9-ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு, 2026-27 கல்வியாண்டில் வரும் நவம்பர் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு, 1991-92-ஆம் கல்வியாண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

2026-27 கல்வியாண்டில் சென்னை மாவட்டம் தவிர, தமிழ்நாட்டில் கிராமப் பஞ்சாயத்து மற்றும் Township பகுதிகளில் செயல்படும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 50 மாணவர்கள், 50 மாணவிகள் என தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதன் மூலம் ஒரு மாணவருக்கு மொத்தம் ரூ.4,000 உதவித்தொகை கிடைக்கும்.

மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் ரூ.10 தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

* விண்ணப்பிக்கும் தொடக்கம்: 07.10.2026 பிற்பகல்

* கடைசி நாள்: 13.10.2026

* தேர்வு நாள்: 21.11.2026, சனிக்கிழமை

* தேர்வுக் கட்டணம்: ரூ.10

எனவே, தகுதியுடைய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் உரிய காலத்துக்குள் தங்கள் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#Scholarship #TamilNadu #TamilNaduEducation #TamilNews #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதிருமணத்தின்போது தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டம்.
Next Article குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமில்லா பதிவு: நவ.2 முதல் அமல்
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026
Dinakkadir

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026
Dinakkadir

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,123 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20262,107 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,367 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.