Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

இலவச கண் சிகிச்சை முகாம்:மயிலாடுதுறையில் 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்

September 19, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கட்டக்குளம் கண்மாயில் 15 ஆயிரம் பனை விதைகள் நடவு

September 19, 2026

டங்ஸ்டன் ஆய்வா?அரசு விளக்கம் அளிக்க பொதுமக்கள் கோரிக்கை

September 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 19
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கட்டக்குளம் கண்மாயில் 15 ஆயிரம் பனை விதைகள் நடவு

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கட்டக்குளம் கண்மாயில் 15 ஆயிரம் பனை விதைகள் நடவு

தினக்கதிர்By தினக்கதிர்September 19, 20261 Min Read9 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் கண்மாயில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

வாடிப்பட்டி அருகே அமைந்துள்ள கட்டக்குளம் கண்மாய், ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்குப் பாசன ஆதாரமாக விளங்கி வருகிறது. தற்போது கடும் வெப்பம் காரணமாக கண்மாய் வறண்டு காணப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கோச்சடை எம்.எம்.டி. வாலிபால் அசோசியேஷன் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெடுங்குளம் முன்னாள் ஊராட்சித் தலைவரும், கண்மாய்கள் பாதுகாப்பு ஆர்வலருமான பிச்சைமணி தலைமை வகித்தார். வாலிபால் அசோசியேஷன் தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார்.

டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்ட 15 ஆயிரத்திற்கும் அதிகமான பனை விதைகள், கண்மாயின் சுமார் 2 கிலோமீட்டர் நீளமுள்ள கரைப் பகுதியில் ஆங்காங்கே கொண்டு செல்லப்பட்டு குவிக்கப்பட்டன.

தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கண்மாய்க் கரையில் சுமார் 2 அடி ஆழத்தில் குழிகள் தோண்டி பனை விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.

பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அவற்றின் அழிவைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் இயற்கை வளப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு உதவவும் வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இந்த முயற்சிக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#Madurai #TamilNaduNews #TamilNews #Tngovt #கட்டக்குளம் #பனைவிதைநடவு #வாடிப்பட்டி
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleடங்ஸ்டன் ஆய்வா?அரசு விளக்கம் அளிக்க பொதுமக்கள் கோரிக்கை
Next Article இலவச கண் சிகிச்சை முகாம்:மயிலாடுதுறையில் 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

இலவச கண் சிகிச்சை முகாம்:மயிலாடுதுறையில் 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்

September 19, 2026
Dinakkadir

டங்ஸ்டன் ஆய்வா?அரசு விளக்கம் அளிக்க பொதுமக்கள் கோரிக்கை

September 19, 2026
Dinakkadir

கர்மயோகி இயக்கம்: பயிற்சி நிறுவனங்களை திறன் மேம்பாட்டு மையங்களாக மாற்ற மண்டலப் பயிலரங்குகள்

September 19, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,095 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,974 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,344 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.