Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மம்தா அணிக்கு புதிய பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

September 18, 2026

சென்னையில் வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்: தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

September 18, 2026

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: சென்னை CCB அலுவலகத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்

September 18, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Friday, September 18
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » சென்னையில் வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்: தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னையில் வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்: தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தினக்கதிர்By தினக்கதிர்September 18, 20261 Min Read58 ViewsUpdated:September 18, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Walgreens India Pvt Ltd) நிறுவனம், சென்னையில் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre – GCC) அமைக்க உள்ளது.

தமிழ்நாடு அரசு உருவாக்கி வரும் OMR GCC வழித்தடத்தில், தரமணியில் உள்ள DLF Downtown வளாகத்தில் இந்த மையம் அமையவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (18.09.2026) கையெழுத்தானது.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசு உயர் அதிகாரிகள் மற்றும் வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஒப்பந்த ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்த புதிய உலகளாவிய திறன் மையத்தின் மூலம், முதல் ஆண்டிலேயே 250-க்கும் மேற்பட்ட உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. தொடர்ந்து நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் சில்லறை வணிகத் தொழில்நுட்பத் துறையில் உலகளாவிய செயல்பாடுகளை மேற்கொள்ளும் வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் முதலீடு, சென்னையின் Healthcare மற்றும் Retail Tech Ecosystem வளர்ச்சிக்கு புதிய ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், OMR பகுதியை உலகளாவிய நிறுவனங்களின் திறன் மையங்கள் அமையும் முக்கிய வழித்தடமாக உருவாக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு இந்த முதலீடு வலுசேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#ITJobs #OMRGCCCorridor #TamilNadu #TamilNews #Tngovt
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: சென்னை CCB அலுவலகத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்
Next Article மம்தா அணிக்கு புதிய பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

மம்தா அணிக்கு புதிய பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

September 18, 2026
Dinakkadir

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: சென்னை CCB அலுவலகத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்

September 18, 2026
Dinakkadir

ஒப்பந்தப்புள்ளி விதிகளை பின்பற்ற வேண்டும்:பொறியாளர்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை

September 18, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,970 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,338 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.