Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விபத்து இழப்பீடு இரட்டிப்பு!

September 17, 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து

September 16, 2026

குன்னூரில் அறிவியல் கருத்தரங்கு

September 16, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Thursday, September 17
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விபத்து இழப்பீடு இரட்டிப்பு!

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விபத்து இழப்பீடு இரட்டிப்பு!

தினக்கதிர்By தினக்கதிர்September 17, 20261 Min Read1 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, பணியின்போது ஏற்படும் மின்சாரம் மற்றும் இயந்திர விபத்துகளுக்கான இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

இதன்படி, உயிரிழப்புக்கான இழப்பீடு ₹5 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடுமையான காயம் அல்லது ஊனம் ஏற்படும் நிலையில் வழங்கப்பட்டு வந்த இழப்பீடு ₹2 லட்சத்தில் இருந்து ₹3 லட்சமாகவும், ஒரு கை, கால் அல்லது ஒரு கண் இழப்பு போன்ற பகுதி பாதிப்புகளுக்கான இழப்பீடு ₹1 லட்சத்தில் இருந்து ₹1.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய இழப்பீடு விவரம்

விபத்து / பாதிப்புபழைய தொகைபுதிய தொகை
உயிரிழப்பு₹5 லட்சம்₹10 லட்சம்
இரு கைகள்/கால்கள் அல்லது இரு கண்கள் இழப்பு₹2 லட்சம்₹3 லட்சம்
ஒரு கை/கால் அல்லது ஒரு கண் இழப்பு₹1 லட்சம்₹1.50 லட்சம்

03.09.2026 முதல் ஏற்படும் விபத்துகளுக்கு இந்த உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அல்லது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு உரிய நடைமுறைகளின்படி இழப்பீடு வழங்கப்படும்.

இழப்பீட்டுத் தொகையை வழங்குவது தொடர்பாக உரிய தலைமைப் பொறியாளர்கள் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்வார்கள். மின்வாரியத் தலைவரின் உத்தரவின் பேரில், பணியாளர் தலைமைப் பொறியாளர் எம். கலைச்செல்வி, இதற்கான செயல்முறை ஆணையை பிறப்பித்துள்ளார்.

பணியின் போது ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் இந்த இழப்பீட்டு உயர்வு முக்கியமான நிவாரணமாக அமையும்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#AccidentCompensation #ContractWorkers #ElectricityBoard #TamilNaduGovernment #TamilNaduNews #TamilNews #TANGEDCO #TNPDCL #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleமதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து

September 16, 2026
Dinakkadir

குன்னூரில் அறிவியல் கருத்தரங்கு

September 16, 2026
Dinakkadir

தமிழகத்தில் 15,933-க்கு டெங்கு பாதிப்பு ; 9 பேர் உயிரிழப்பு

September 16, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.