Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Friday, September 11
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » கோவில் சொத்துக்கள் இனி வெளிப்படை!90 நாட்களுக்குள் அறிவிப்பு பலகையில் விவரங்களை வெளியிட உத்தரவு

கோவில் சொத்துக்கள் இனி வெளிப்படை!90 நாட்களுக்குள் அறிவிப்பு பலகையில் விவரங்களை வெளியிட உத்தரவு

தினக்கதிர்By தினக்கதிர்September 4, 20261 Min Read69 ViewsUpdated:September 5, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களின் சொத்து விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வைக்கப்பட வேண்டும் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாநில தகவல் ஆணையர் திரு. வி.பி.ஆர். இளம்பரிதி, M.A., B.L., M.Phil., அவர்கள் வழங்கிய உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் 90 நாட்களுக்குள் 11 முக்கிய தகவல்கள் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட வேண்டும்.
வெளியிட வேண்டிய முக்கிய தகவல்கள்:
1. கோவில் சொத்து விவரங்கள்
• அசையா சொத்துக்கள்
• தோப்புகள், விவசாய நிலங்கள், காலி நிலங்கள்
• வணிக கட்டிடங்கள், குடியிருப்புகள்
• கட்டளை சொத்துக்கள்
• குத்தகைதாரர் பெயர், குத்தகை காலம்
• வாடகைதாரர் விவரம் மற்றும் நிலுவை வாடகை
2. அசையும் சொத்துக்கள் விவரம்
• வங்கி வைப்பு நிதி விவரம்
• நிரந்தர சேமிப்பு கணக்கு விவரங்கள்
• உலோக பொருட்கள்
• உபயதாரர்கள் மற்றும் நன்கொடைகள்
3. ஸ்தல வரலாறு மற்றும் சொத்து பதிவேடு
பக்தர்கள் அறியும் வகையில் கோவில் தோற்றம், வரலாறு உள்ளிட்ட விவரங்கள் காட்சிப்படுத்த வேண்டும்.
4. பூஜை மற்றும் திருவிழா விவரங்கள்
• பூஜை நேரங்கள்
• திருவிழாக்கள்
• நடை திறப்பு நேரம்
5. பணியாளர் விவரங்கள்
• நிரந்தர பணியாளர்கள்
• தற்காலிக பணியாளர்கள்
• அர்ச்சகர்கள் பெயர்கள்
6. சேவை கட்டணங்கள் மற்றும் வசதிகள்
பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், கட்டண விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்.
7. வரவு–செலவு கணக்குகள்
• கணக்கு பதிவேடுகள்
• தணிக்கை அறிக்கைகள்
8. அறங்காவலர் குழு தீர்மானங்கள்
9. அறநிலையத் துறை அரசாணைகள், ஆணைகள், சுற்றறிக்கைகள்
இணையதளத்தில் வெளியிட உத்தரவு.
10. அதிகாரிகளின் உத்தரவுகள்
ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களின் உத்தரவுகள் இணையத்தில் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.

வழக்கு எண்: SA 6805/D/2025
விசாரணை நாள்: 10.08.2026
ஆணை நாள்: 02.09.2026

“கோவில் சொத்துக்கள் மக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்ற நோக்கில் தகவல் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் உத்தரவாக இது பார்க்கப்படுகிறது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#HRCE #RTI #TamilNadu #TamilNaduNews #TamilNews #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதாசில்தார் அதிகாரம் குறைப்பு… துணை தாசில்தாருக்கு 12 சான்றிதழ்கள் வழங்கும் அதிகாரம்!
Next Article கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட வழக்குகளை நீக்க வேண்டும்
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.