உத்தமபாளையம் – கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுப்பட்டி அருகே தொடர்ந்து நிகழும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், உத்தமபாளையத்திலிருந்து புதிய புறவழிச்சாலை ஒன்றை அமைக்க வேண்டும் என்று கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா சட்டமன்றத்தில் அரசை வலியுறுத்தினார்.
பொதுப்பணித்துறை தொடர்பான கூடுதல் கேள்வி நேரத்தில் அவர் பேசியதாவது:
தேனி மாவட்டத்தில் தேவாரம் முதல் குமுளி வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்டது; ஆனால், தற்போது இரு வழிச்சாலையே அமைக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் – கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க உத்தமபாளையத்திலிருந்து புதிய புறவழிச்சாலை அமைக்கப்பட வேண்டும். இத்திட்டம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் விபத்துகளைக் கட்டுப்படுத்தவும் உதவும். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அவர்களை ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புறவழிச்சாலை அமைப்பதற்கான தேவையான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

