Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 12
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தவெகவுக்கு தாவும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? செங்கோட்டையன் பகீர் தகவல்!

தவெகவுக்கு தாவும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? செங்கோட்டையன் பகீர் தகவல்!

Balasubramanian KBy Balasubramanian KAugust 24, 20262 Mins Read42 ViewsUpdated:August 24, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தவெகவுக்கு வரத் தயாராக உள்ளனர்; அதிமுகவில் வெறும் தலைவர்கள் மட்டுமே மிஞ்சி இருப்பார்கள் என்று, கோபியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசி, பரபரப்பை கிளப்பி உள்ளார்.

தவெக அரசின் 100 நாட்களை ஒட்டி தவெக பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: மக்கள் விரும்பிய அரசியல் மாற்றமாகத் தவெக உருவெடுத்துள்ளது. வரும் காலத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராவார்.

தமிழகத்தை இதுவரை ஆண்ட கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுமே தங்களது செல்வாக்கை இழந்து தடுமாற்றத்தில் உள்ளன. குறிப்பாக அதிமுக மிகவும் பலவீனமாக உள்ளது. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துவிட்டனர்.

மேலும் பல அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணையத் தயாராக உள்ளனர். அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து வெளியேறக் காத்திருக்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியாமல் இன்னும் 10 எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணையத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

படிவம் கைக்கு வந்ததும் அந்த 10 பேரும் முறைப்படி விலகித் தவெகவில் இணைந்து விடுவார்கள். அதுமட்டுமின்றி, மொத்தமாக 25 எம்.எல்.ஏ.க்கள் ஒரே நேரத்தில் தவெகவுக்கு வரத் தயாராகிவிட்டனர். இவை அனைத்தும் நடக்கும் போதுதான் அதிமுக தலைமைக்கு நிலைமையின் தீவிரம் புரியவரும்

தமிழக அரசியலில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் தற்போது தங்களது செல்வாக்கை இழந்து தடுமாறி வருகின்றன. வடதுருவமும் தென்துருவமும் போல செயல்பட்ட இரு கட்சிகளும் இன்று கூட்டணி வைக்கலாமா என்ற யோசனைக்கு வரும் அளவுக்குப் பலவீனமடைந்துள்ளன. இது தொண்டர்களுக்குச் செய்யப்படும் பச்சை துரோகம்.

திமுக மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் சில கட்சிகளில் வெறும் தலைவர்கள் மட்டுமே மிஞ்சுவார்களே தவிர, தொண்டர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

Author

  • Balasubramanian K
    Balasubramanian K
#ADMK #AIADMK #KASengottaiyan #TamilNaduPolitics TVK GOVT
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleசித்தையன்கோட்டை ஸ்ரீமதுஇராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
Next Article ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்… பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு
Balasubramanian K
  • Website

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.