Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, September 13
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » மணப்பாறை அருகே வினோத திருவிழா: ஆண்-பெண் பூதங்களுக்கு திருமணம் செய்து வைத்து படுகள வழிபாடு!

மணப்பாறை அருகே வினோத திருவிழா: ஆண்-பெண் பூதங்களுக்கு திருமணம் செய்து வைத்து படுகள வழிபாடு!

தினக்கதிர்By தினக்கதிர்May 27, 20262 Mins Read1 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மணப்பாறை, மே 27:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண் மற்றும் பெண் பூதங்களுக்கு வினோத முறையில் திருமணம் செய்து வைத்து, இளைஞர்கள் பல்வேறு வேடமணிந்து கொண்டாடிய படுகளத் திருவிழா பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தது.

மணப்பாறையை அடுத்த பெரியமணப்பட்டியில் பழமை வாய்ந்த ‘தானா முளைத்த மாரியம்மன்’ கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒன்பது கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தும் வருடாந்திர திருவிழா கடந்த வாரம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பூதங்களுக்குத் திருமணம்

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ‘படுகளம் திருவிழா’ இன்று மாலை நடைபெற்றது. இதற்காகச் சின்னமணப்பட்டியில் மூங்கில் குச்சிகளைக் கொண்டு, பிரம்மாண்ட அளவிலான ஆண் மற்றும் பெண் பூதங்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டன. தொடர்ந்து, அந்த இரு பூதங்களுக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

2 கி.மீ தூரம் தூக்கிச் சென்ற மக்கள்

திருமண சடங்குகள் முடிந்தவுடன், அங்கிருந்து காட்டுப்பகுதி வழியாக தாரை தப்பட்டை மற்றும் மேள தாளங்கள் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் கிராம மக்கள் பூதங்களின் உருவங்களை சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள மணப்பட்டிக்குத் தங்களது தோள்களில் தூக்கிச் சென்றனர்.

காந்தாரா, காளி வேடமிட்ட இளைஞர்கள்

படுகள நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் காந்தாரா, காளி, பேய், ராணுவ வீரர்கள், ஆதிவாசிகள் மற்றும் கரடி உள்ளிட்ட பல்வேறு விதமான வேடங்களை அணிந்து வந்து, தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். கிராம வீதிகளில் அவர்கள் ஆடிய ஆட்டம் திருவிழாவை மேலும் அமர்க்களப்படுத்தியது.

படுகளம் நிறைவு & அபிஷேகம்

நிறைவாக, மணப்பட்டி தானா முளைத்த மாரியம்மன் கோவில் முன்பு திரண்ட பூதங்கள் மற்றும் வேடமணிந்த இளைஞர்கள், முன்னும் பின்னுமாக ஓடி விளையாடி படுகள வழிபாட்டை முறைப்படி நிறைவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

கிராமியக் கலைகளுடனும், பாரம்பரிய வழிபாட்டுடனும் நடைபெற்ற இந்த வினோத திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Manapparai Rural Art Tamilnadu Tamilnadu Govt Tiruchy District TVKVijay
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleமதுராந்தகம் வெண்காடீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: பக்திப் பெருக்குடன் கோலாகலமாக நடைபெற்ற தேர்த்திருவிழா!
Next Article துறையூர் தனியார் மதுபான கூடத்தில் துணை சபாநாயகர் திடீர் ஆய்வு: முறைகேடுகள் அம்பலமானதால் பரபரப்பு!
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 12, 2026
Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.