Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி: திமுக நிர்வாகி உள்ளிட்டோர் மீது FIR பதிவு

September 19, 2026

ஒரே இடத்தில் 5, 10 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் விவரம் சேகரிப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

September 19, 2026

மம்தா அணிக்கு புதிய பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

September 18, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 19
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » ஒரே இடத்தில் 5, 10 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் விவரம் சேகரிப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

ஒரே இடத்தில் 5, 10 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் விவரம் சேகரிப்பு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

தினக்கதிர்By தினக்கதிர்September 19, 20261 Min Read400 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் இயக்குநரகங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களில் ஒரே இடத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்களின் விவரங்களைச் சேகரித்து அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,நிர்வாக அலுவலர் (Administrative Officer – AO), இளநிலை நிர்வாக அலுவலர் (Junior Administrative Officer – JAO), அலுவலகக் கண்காணிப்பாளர் (Office Superintendent – OS), உதவியாளர் (Assistant) உள்ளிட்ட பணியிடங்களில் பணியாற்றும் ஊழியர்களின் விவரங்களைத் தொகுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரே அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாகவும் தொடர்ந்து பணியாற்றி வருபவர்கள் குறித்த முழு விவரங்களை வரும் 23.09.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அவசரமானது என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பதவி உயர்வின் போது வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட பின்னர், நிர்வாக காரணங்கள் அல்லது தற்காலிகப் பணி மாற்றம் உள்ளிட்ட காரணங்களைக் கூறி மீண்டும் பழைய பணியிடத்திற்கே திரும்பியவர்கள் குறித்த விவரங்களையும் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது,

* பதவி உயர்வில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டவர்கள் யார்?

* அவர்கள் எப்போது மீண்டும் பழைய இடத்துக்கு வந்தனர்?

* அதற்கான காரணம் என்ன?

என்ற விவரங்களும் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்றுவதால் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை குறைய வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக கணக்கு மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் நீண்டகால பணியிட நிலைத்தன்மை காரணமாக சில சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் அரசு கருதுகிறது.

இதையடுத்து, நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#GovernmentEmployees #GovernmentOrder #TamilNadu #TamilNaduNews #TamilNews #Tngovt
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleமம்தா அணிக்கு புதிய பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு
Next Article ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி: திமுக நிர்வாகி உள்ளிட்டோர் மீது FIR பதிவு
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி: திமுக நிர்வாகி உள்ளிட்டோர் மீது FIR பதிவு

September 19, 2026
Dinakkadir

மம்தா அணிக்கு புதிய பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

September 18, 2026
Dinakkadir

சென்னையில் வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்: தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

September 18, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,094 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,971 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,340 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.