Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

தமிழகத்தில் 15,933-க்கு டெங்கு பாதிப்பு ; 9 பேர் உயிரிழப்பு

September 16, 2026

சமூக வலைதள அவதூறு பதிவுகள்: கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்

September 16, 2026

தாம்பரம் மாநகராட்சி அசோகா தூண் விவகாரம்: அரசின் விளக்கத்துக்கு அறப்போர் இயக்கம் 9 கேள்விகள்

September 16, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Wednesday, September 16
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தமிழகத்தில் 15,933-க்கு டெங்கு பாதிப்பு ; 9 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 15,933-க்கு டெங்கு பாதிப்பு ; 9 பேர் உயிரிழப்பு

தினக்கதிர்By தினக்கதிர்September 16, 20261 Min Read1 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டில் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை 15,933 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதால், அப்பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு பணிகளுக்காக மாநிலம் முழுவதும் 25,645 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 11,322 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகள் மற்றும் தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சுவாசப் பாதை தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் ஓய்வெடுக்கச் செய்ய வேண்டும்.

கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் ஏற்பட்டால், மருந்தகங்களில் சுயமாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்த்து, அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், காய்ச்சல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#DengueAlert #DengueFever #HealthUpdate #TamilNaduNews #TamilNews #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleசமூக வலைதள அவதூறு பதிவுகள்: கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

சமூக வலைதள அவதூறு பதிவுகள்: கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்

September 16, 2026
Dinakkadir

தாம்பரம் மாநகராட்சி அசோகா தூண் விவகாரம்: அரசின் விளக்கத்துக்கு அறப்போர் இயக்கம் 9 கேள்விகள்

September 16, 2026
Dinakkadir

வங்கி பத்திரப் பதிவுக்கு புதிய நடைமுறை: ‘Presenceless Registration’ முறை அமல்

September 12, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.