Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, October 26
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » மோதலைத் தடுக்க முயன்ற போது பெண் காவலர் உயிரிழப்பு

மோதலைத் தடுக்க முயன்ற போது பெண் காவலர் உயிரிழப்பு

தினக்கதிர்By தினக்கதிர்September 29, 20261 Min Read584 ViewsUpdated:September 29, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பரமக்குடி அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க முயன்ற பெண் காவலர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் கன்னகி (35), திங்கள்கிழமை (செப். 28) இரவு பரமக்குடி அரசு மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, வெளியே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சில இளைஞர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் அவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இரு தரப்பினரையும் விலக்கி மோதலைத் தடுக்க கன்னகி முயன்றுள்ளார். அப்போது கருப்புராஜா எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர் அவரை தள்ளியதாகவும், இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கன்னகிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், பரமக்குடி டிஎஸ்பி சுகுமாரன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#paramakudi #TamilNaduNews #TamilNews #Thoothukudi #Tngovt #TNPolice
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleவட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு
Next Article பணம் கொடுத்து வாங்கப்படும் ‘புகழ்’ : பணத்தை வாரியிறைக்கும் ‘டிஜிட்டல்’ மோகம்!
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026
Dinakkadir

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026
Dinakkadir

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,123 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20262,107 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,367 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.